புதன்கிழமை, ஜனவரி 15, 2025

யானை பிரஸ்மீட்டில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஹரி.. ஆடிப்போன அருண் விஜய்

தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. விக்ரமின் சாமி, சூர்யாவின் வேல், ஆறு, சிங்கம் போன்ற படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தில் சமுத்திரகனி, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் யானை படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் அருண்விஜய், பிரியா பவானி சங்கர், ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஹரி இப்படம் சென்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என கூறினார். மேலும் இதுவரை வந்த தன்னுடைய படங்களை காட்டிலும் யானை படம் வித்தியாசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுயிருந்தார்.

நாம் ஒரு பிரச்சினையை சுமந்து கொண்டு இருக்கிறோம், குடும்பத்தையும் சுமக்கிறோம், நண்பனையும் தூக்கி சுமக்கிறோம், ஒரு கட்டத்தில் கோபம் வந்தால் எல்லாத்தையும் போட்டு மிதித்துவிடுவோம். அதனால்தான் இப்படத்திற்கு யானை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஹரி கூறினார்.

இந்நிலையில் ஹரி, ஹீரோக்கள் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பற்றிப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். அந்த வார்த்தையைக் கேட்டு மேடையில் இருந்தவர்களும், எதிரில் இருந்தவர்களும் சிரித்து விட்டனர்.

எல்லாரும் சிரிப்பதைப் பார்த்த ஹரி, கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி விட்டு ஏன் இப்ப சிரிக்கிறீங்க வார்த்தையை ஏதும் விட்டுவிட்டேனா என சிரித்துக் கொண்டே அதை சமாளித்தார். பக்கத்தில் இருந்த அருண் விஜய்க்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிஷம் ஆடி போய்விட்டார். தற்போது ஹரி பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News