வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆபாசத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்.. அருவருப்புக்கு அஞ்சாமல் பதிலளித்த யாஷிகா

விபத்திற்குப் பிறகு யாஷிகா தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வருவதால் ரசிகர்கள் இவரை ஒரு கவர்ச்சி கன்னியாகவே பார்க்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவரும் தன்னுடைய கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறீர்களா என்று விவகாரமான ஒரு கேள்வியை கேட்டார். இதற்கு நான் யாஷிகா என அவர் பதிலளித்தார்.

அதாவது அவர் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூறாமல் மறைமுகமாக இப்படி ஒரு பதிலடியை அந்த ரசிகருக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு கேள்விக்கு கோபப்படாமல் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பதிலளித்த யாஷிகாவை பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது ஒரு ரசிகர் அவரிடம் மீண்டும் ஒரு வில்லங்கமான கேள்வியை கேட்டு வைத்துள்ளார். அதாவது அவர் உங்களை முதலில் நிர்வாணமாக பார்த்தது யார் என்று கேட்டிருக்கிறார். அவரின் இந்த கேவலமான கேள்விக்கு யாஷிகா கோபப்படாமல் மிகவும் நிதானமாக ஒரு பதிலை கூறி இருக்கிறார்.

அது என்னவென்றால் ரசிகரின் அந்தக் கேள்விக்கு டாக்டர் என்று நினைக்கிறேன் என கூலாக பதில் அளித்துள்ளார். தற்போது அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட அந்த ரசிகருக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்துள்ளது.

அதோடு ரசிகர்கள் ஒரு சிலர் யாரோ இப்படி கேவலமாக கேட்கும் கேள்விக்கு பதில் என்ற பெயரில் இப்படி பதிவிட்டு கூறுவது முட்டாள்தனம் என்று யாஷிகாவுக்கும் அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் அவர் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்து வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News