பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு படம் பேசப்படுகிறது என்றால் அதுவே அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அந்த படம்தான் யாத்திசை. இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் ரிலீசான யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன், சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியான வரலாற்று திரைப்படம் ஆன யாத்திசைக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது மட்டுமல்லாமல் பாசிட்டிவ்வான விமர்சனங்களும் குவிகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களின் பெருமையை விவரித்த மணிரத்தினத்திற்கு போட்டியாக, பாண்டியர்களின் படை பலத்தையும் குறுநில மன்னர்களான எயினர்களின் படை பலத்தையும் பறைசாற்றும் வகையில் யாத்திசை படத்தை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை வெறும் 7 கோடி பட்ஜெட்டில் மட்டுமே அறிமுக நடிகர் நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கி, படத்தை திரையில் பார்ப்போரை மெய் சிலர்க்க வைத்துள்ளனர். 7ம் நூற்றாண்டில் அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. இதனால் இந்த படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் அலை அலையாய் வரத் துவங்கி உள்ளனர்.
Also Read: பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?
யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த ரிப்போர்ட் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 60 லட்சத்தையும், கர்நாடகாவில் 5 லட்சத்தையும், கேரளாவில் 3 லட்சத்தையும் யாத்திசை வசூல் செய்திருக்கிறது. அது மட்டுமல்ல ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 4 லட்சத்தையும், வட இந்தியாவில் 1 லட்சத்தையும், வெளிநாடுகளில் மொத்தமாக 4 லட்சத்தையும் வசூல் செய்திருக்கிறது.
மொத்தமாக யாத்திசை ஒரே நாளில் மட்டும் 77 லட்சம் வரை வசூலை ஈட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதோடு நின்று விடாது விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் இந்த வசூல் அதிகரிக்கும். இருப்பினும் முதல் நாளிலேயே படத்திற்கு அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.