பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதாவது பான் இந்திய திரைப்படமாக கே ஜி எஃப் 2 கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சக்கைபோட்டு வருகிறது.
இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்த அனைத்து படங்களின் சாதனையும் கே ஜி எஃப் 2 படம் முறியடித்து வருகிறது. அண்மையில் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனையும் இப்படம் முறியடித்துள்ளது.
கேஜிஎஃப் படம் வறுமையில் இருக்கும் ஏழைச் சிறுவன் எப்படி தங்கச் சுரங்கத்திற்க்கு ராஜாவாகிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் யாஷ் ராக்கி பாயாக நடித்திருந்தார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக யாஷ் உயர்ந்துள்ளார்.
கே ஜி எஃப் 2 படத்திற்கு முன்னதாக யாஷ் 20 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்திற்காக யாஷ் 27 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் 750 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் படம் வெளியான ஒரு வாரத்துக்கு உள்ளேயே இவ்வளவு வசூல் என பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் யாஷை வைத்து பல 100 கோடிகள் சம்பாதித்தா தயாரிப்பு நிறுவனம் அவருக்கு 27 கோடிகள் மட்டுமே கொடுத்து ஏமாற்றி உள்ளதாக குற்றச்சாட்டும் வெளியாகி உள்ளது.
ஆயிரம் கோடி வசூலை தாண்டி சாதனை படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய படத்தின் வசூலை வைத்து தான் அடுத்த படத்தின் சம்பளத்தை ஹீரோக்கள் நிர்ணயிக்கின்றனர், அப்படி வைத்து பார்க்கும்போது குறைந்தது 100 கோடிக்கு மேல் அவரது சம்பளம் இருக்கவேண்டும், ஆனால் இல்லை என்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.