செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஓட்டு போடுவதற்கு இது ஒன்னும் எலக்சன் இல்ல.. முதல்முறையாக பீஸ்ட் படத்தை பற்றி பேசிய யாஷ்

2018-ஆம் ஆண்டில் வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.

இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது தாய் சென்டிமென்ட், காதல், முக்கியமாக ஆக்சன் போன்றவற்றை கேஜிஎப் திரைப்படம் சூப்பராக திரையிடப்பட்டது. இந்த படத்திற்காக சிறந்த ஆக்ஷன் மற்றும் சிறந்த டைரக்சனுக்கான தேசிய விருதையும் கே.ஜி.எஃப் திரைப்படம் அள்ளிக் குவித்தது. கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு எப்படி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோல 2வது பாகத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் 2வது பாகம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதே சமயத்தில் தமிழகத்தில் அதே ஏப்ரல் 13ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த இரண்டு திரைப்படத்தையும் ஒன்றாக வைத்து பல நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிக்கப்பட்டு வருகிறது .கே.ஜி.எப் 2 பெருசா பீஸ்ட் பெருசா அடிச்சு காட்டு பாப்போம் என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் அளவிற்கு இப்போது களம் சூடுபிடித்துள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக தற்போது நடைபெற்ற ஒரு இன்டர்வியூவில் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் பேசியுள்ளார்

அதில் அவர் இது ஒன்றும் ஒரு ஓட்டு போடற எலக்சன் இல்லைங்க சினிமாங்க சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கணும் எல்லா படத்தையும் பார்க்கணும் நாங்க எட்டு மாசத்துக்கு முன்னாடியே ஏப்ரலில் கேஜிஎப் வரப்போகுதுன்னு அறிவிச்சுட்டோம். ஆனா இப்போ பீஸ்ட் எங்ககூட வந்து இருக்கு இத கேஜிஎப் vs பீஸ்ட் என்று பார்க்காமல் கேஜிஎப் & பீஸ்ட் ஆக பார்க்க வேண்டும்.

விஜய் சார் இருக்கிற இடம் வேற லெவல், அவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க, நாங்க பான் இந்தியா படமாக எடுத்திருக்கோம். இந்த திரைப்படம் எங்களுக்கு முக்கியமான திரைப்படம், அதேபோல விஜய் ரசிகர்களுக்கும், விஜய் சாருக்கும் பீஸ்ட் திரைப்படம் முக்கியமான திரைப்படம் எல்லாத்தையும் பார்க்கலாம். நானும் விஜய் சாரோட பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க ஆவலோட காத்திருக்கேன் என்று தெரிவித்துள்ளார். இவரோட இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் என்ன மனுஷன்யா சான்ஸ்சே இல்லை என்று பாராட்டி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Trending News