வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மனசு வலிக்குது, முதுகுல குத்திட்டாங்க.. லிவிங் டு கெதர் பிரேக்கப் செய்த காரணத்தை அம்பலப்படுத்திய யாஷிகா

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மாடல் அழகி யாஷிகா ஆனந்த், அதற்கு பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். பிறகு அவருடைய நண்பர்களான பாலாஜி முருகதாஸ், நிரூப் இருவரும் அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல மாடலான நிரூப் சோஷியல் மீடியாவில் யாஷிகா ஆனந்த் நேரலையில் இருந்தபோது அவருக்கு லிப்-லாக் கொடுத்த நபர் என்பதை அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கண்டுபிடித்தனர்.

Also Read: லிப் லாக் கிஸ் அடித்த யாஷிகா.. எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப இந்த புகைப்படம் தேவையா!

அதன்பிறகு நிரூப், ‘பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்குக் காரணமும் யாஷிகா தான் என்றும் இவ்வளவு வளர்ந்ததற்கு காரணம் யாஷிகா தான்’ என்று வெளிப்படையாகப் பேசி யாஷிகாவை தன்னுடைய முன்னாள் காதலி என்று கூறினார்.

பிறகு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா படுகாயமுற்று நடக்க முடியாத நிலையிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த நிரூப்பை ஊக்குவிப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு நிரூப்பும் யாஷிகாவிற்காகயாவது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் வெறி கொண்டு விளையாடினார்.

Also Read: தோழிக்கு கொடுத்த லிப் லாக்.. சமூக வலைதளத்தை பற்றவைத்த யாஷிகா ஆனந்த்

ஆனால் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் காதலர்களாக இருந்த நிரூப்-யாஷிகா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரிந்தே இருக்கின்றனர். இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை யாஷிகா தற்போது சோஷியல் மீடியாவில் தெரிவித்திருக்கிறார்.

‘பாய்ஸ் அண்ட் கேள் பிரண்டாக இருப்பதெல்லாம் லவ் கிடையாது. முதுகில் குத்தியவனை காதலனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரேக்-கப்பிற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அதிலும் மிகவும் முக்கியமானது தனது மனம் காயப்பட்டதுதான்’ என்று யாஷிகா தனது பிரேக்-கப்பிற்கான காரணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இப்பொழுது யாஷிகா ஆனந்த் அண்ணாச்சியின் ‘தி லெஜன்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘கடமையை செய்’ படத்திலும் நடித்து வருகிறார்.

Also Read: இரண்டாவது திருமணத்தால் படாதபாடு படும் நடிகர்.. எல்லாம் முதல் மனைவி விட்ட சாபம்

Trending News