செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சந்தகட போல் மாறிய பிக்பாஸ் வீடு .. மொத்த வெறுப்பையும் சம்பாதிக்த போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வழக்கமாக பிக் பாஸ் வீட்டின் முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் வானத்தைப்போல ரேஞ்சுக்கு ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்பார்கள். அதன் பிறகு தான் அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் மனஸ்தாபங்கள் போன்றவை ஏற்படும்.

ஆனால் இந்த சீசன் முதல் நாளிலிருந்தே ஏழரையாக தான் இருக்கிறது. அதிலும் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயத்திற்கெல்லாம் போட்டியாளர்கள் சண்டை போட்டு அழுது கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நான்காவது நாளான நேற்று பிக் பாஸ் வீடு சந்தை கடை போன்று கூச்சலும், குழப்பமும் ஆக இருந்தது. நான்கு அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்து வரும் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி ஒவ்வொரு டீமை பற்றியும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஸ்டார் கொடுக்கின்றனர்.

அதிலிருந்து தான் பிரச்சனை மெல்ல மெல்ல தொடங்கியது. அதிலும் மற்ற அணியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொல்லப்படும் குறைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மகேஸ்வரி எது கூறினாலும் அதை ஒரு வாக்குவாதமாக மாற்றி எரிச்சல் படுத்துகிறார். அந்த வகையில் மணிகண்டன், முதல் நாள் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ட நீங்கள் மறுநாள் ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

Also read:கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

ஆனால் மகேஸ்வரி அதற்கு சரியான பதிலை சொல்லாமல் அப்படி ஒன்றும் ரூல் இல்லை, கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அசால்டாக பதில் கூறுகிறார். இதனால் சற்று நேரம் அங்கு காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜிபி முத்து மற்ற அணிகளுக்கும் வேலை செய்து கொடுக்கிறார் என்று கூறி அவரை ஸ்வாப் செய்தனர். இதை எதிர்பார்க்காத ஜி பி முத்து தன் பக்க நியாயத்தையும் விளக்கினார். அதன் பிறகு அசீம் அடுத்த சண்டையை ஆரம்பித்தார்.

தன் டீமில் உள்ளவர்களே தன்னை பேசவிடவில்லை என்று கூறி திடீரென்று கோபித்துக் கொண்டு போய் பெட்ரூமில் உட்கார்ந்து கொண்டார். பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆகி வந்த அவர் மகேஸ்வரிடம் ஒரு சண்டையை ஆரம்பித்தார். இப்படியே ஆரம்பித்த அவர்களுடைய சண்டை நீயா நானா பார்ப்போம் வா என்ற ரேஞ்சுக்கு தொடர்ந்தது. பின்பு கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருந்த ஜிபி முத்துவை சக ஆண் போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர்.

Also read:சாம்பாரை வைத்து சண்டை மூட்டி விட்ட பிக்பாஸ்.. லூசுத்தனமா கேள்வி கேட்டு சிக்கிய அடுத்த ஜூலி

அப்போது தனலட்சுமிக்கும் அவருக்கும் ஒரு பெரும் சண்டை ஏற்பட்டது. இடையே அவர் வா போ என்று கூறியதை பெரிய சண்டையாக மாற்றிய தனலட்சுமி எங்கு தன் பேச்சு எடுபடாமல் போய்விடுமோ என்று திடீரென அழுக ஆரம்பித்தார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஜி பி முத்து தனலட்சுமி பேசியதால் கண் கலங்கி போய் அமர்ந்திருந்தார். இப்படியாக அந்த நாள் செல்ல மறுநாள் காலை ஆட்டம் பாட்டத்துடன் விடிந்தது. போட்டியாளர்கள் அவரவர் வேலையை ஆரம்பிக்க சில புறம் பேசும் காட்சிகளும் இருந்தது. அதில் தன்னுடைய டீமை பற்றி சாந்தி ஒரு புறம் புலம்பி கொண்டிருக்க மகேஸ்வரி ஒருபுறம் கத்திக் கொண்டிருந்தார்.

அதில் மகேஸ்வரி தேவை இல்லாத விஷயங்களுக்கெல்லாம் பேசுவதும், அசால்ட்டாக பதில் கூறுவதும் அங்கு இருக்கும் சக போட்டியாளர்களையே கோபப்படுத்தி வருகிறது. அதிலும் அசீம் அவரைப் பார்த்து உன் நடவடிக்கைகளை பார்த்து காரி துப்புவாங்க, வாந்தி எடுப்பாங்க போன்ற படு லோக்கல் வார்த்தைகளை எல்லாம் இறக்கினார். இதனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் இவர்களுக்குள் சண்டை பெரிய அளவில் இருக்கும் என்று தெரிகிறது. இப்படி பிரச்சனையுடன் சென்ற நேற்றைய எபிசோட் இன்று எப்படி செல்லும் என்ற ஆர்வத்தை கிளப்பி இருக்கிறது.

Also read:பிக்பாஸில் தாக்கு பிடிக்க முடியாத 2 போட்டியாளர்கள்.. வெளியேறப் போறது உறுதி, இதுதான் காரணம்

Trending News