புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரிலீசுக்கு தயாரான யோகி பாபுவின் சட்னி சாம்பார்.. காமெடி அலப்பறையில் வெளியான ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Chutney Sambar Trailer: சூரி ஹீரோ அவதாரம் எடுத்தபின் தற்போது யோகி பாபு கைவசம் ஏகப்பட்ட படங்கள் குவிய ஆரம்பித்துள்ளது. கதையின் நாயகனாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் காமெடியையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அதன்படி கோட், கங்குவா, அந்தகன் என இவர் காமெடியில் கலக்கியுள்ள படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் யோகி பாபு நடித்துள்ள சட்னி சாம்பார் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

ராதா மோகன் இயக்கி இருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. காமெடி அலப்பறையாக உருவாகி உள்ள இந்த தொடரில் வாணி போஜன், கயல் சந்திரன், நித்தின் சத்யா, மைனா நந்தினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெளியானது சட்னி சாம்பார் ட்ரெய்லர்

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஊட்டியில் பிரபலமாக இருக்கும் அமுதா கஃபே காட்டப்படுகிறது. அதை அடுத்து அப்பாவின் ஆசைக்காக கயல் சந்திரன் யோகி பாபுவை தேடி வருகிறார். தள்ளு வண்டியில் டிபன் கடையை நடத்தி வரும் இவருடைய கடையின் பெயரும் அமுதா உணவகம் தான்.

அதை அடுத்து அவரை ஊட்டிக்கு அழைத்துச் செல்லும் கயல் சந்திரன் தன் அப்பாவை சந்திக்க வைக்கிறார். இதில் யோகி பாபுவின் அம்மா தான் அவருடைய முன்னாள் காதலி என்பதும் தெரிய வருகிறது.

இதனால் ஏற்படும் குழப்பத்தை காமெடியாக சொல்லி இருக்கின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. அதில் யோகி பாபுவின் வழக்கமான மக்கள் வசனங்களும் ரசிக்க வைத்துள்ளது.

ஓடிடியில் வெளியாகும் யோகி பாபுவின் சட்னி சாம்பார்

Trending News