வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யோகி பாபு மேல் பழி போட்ட படக்குழு.. மக்களே மறந்த நடிகை நம்பியிருந்த படமும் கோவிந்தா

விஜய் சேதுபதி கால்சீட் கூட எளிதாக கிடைக்கும் நிலையில் தற்போது யோகி பாபு கால்சீட் மட்டும் எந்த படத்திற்கும் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் அவர் கையில் வைத்திருக்கும் படங்கள். மனிதன் கிட்டத்தட்ட ஒரு டசன் படங்களை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார்.

எல்லா படங்களிலும் நடிகர்களுக்கு நிறைய நாட்கள் கால்ஷீட் இருக்கும் ஆனால் இந்த காமெடி நடிகர்கள் மற்றும் காட்சிகளுக்கு ஏற்ப குறைந்த நாட்கள் கால்சீட் கொடுத்தால் போதும். அவர்கள் வந்து செல்லும் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்கள் கால்சீட் எளிதாக கிடைக்கும். ஆனால் காமெடி நடிகரான யோகிபாபு கால்ஷீட் மட்டும் எப்பொழுதும் கிடைப்பதே இல்லை.

இப்பொழுது மக்களை மறந்த நடிகை ஒருவர் ரீ என்ட்ரி கொடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர் படத்திற்கு இப்பொழுது ஒரு பெரிய சிக்கல் வந்துள்ளது. சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த படத்தின் காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் நடந்து வருகிறது அதற்கு மட்டும் 25 லட்ச ரூபாய்க்கு செட் போட்டு முடித்துள்ளனர். ஹீரோயினை ஓரளவு சமாதானம் செய்து அந்த இடத்திற்கு கூட்டிட்டு வந்து விட்டனர். ஆனால் யோகி பாபு மட்டும் வரவே இல்லையாம்.

யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்காக காத்திருக்கும் பட குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதைப்பற்றி யோகிபாபு தரப்பிடம் கேட்டதற்கு நான் அந்த படத்திற்கு இரண்டு, மூன்று தடவை கால்ஷீட் கொடுத்து விட்டேன் ஆனால் அவர்கள் அப்பொழுது ரெடி ஆகவில்லை.

இப்பொழுது யோகிபாபு பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் அந்தப் படத்திற்காக இப்பொழுது அவரை அழைத்து தொல்லை கொடுக்கின்றனராம். இது ஒருபுறமிருக்க அந்த நடிகையோ இப்பொழுதுதான் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு நடித்துக் கொடுக்காவிட்டால் நடிகையின் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை.

Trending News