ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே நாளில் 3 படங்களில் நடித்து கல்லாக்கட்டும் 5 நடிகர்கள்.. யோகி பாபு தூக்கத்தை கெடுத்த காமெடியன்

Yogi Babu: நடிகர்களின் நடிப்பு எதார்த்தமாக இருந்தாலே ரசிகர்கள் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் முன்னணி நடிகர்களாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்களுடைய நடிப்பு ஏதோ ஒரு விதத்தில் மக்களை திருப்திப்படுத்தும் விதமாக இருந்தாலே அவர்கள் அசுர வளர்ச்சியை அடைந்து விடுவார்கள்.

அந்த வகையில் சில நடிகர்கள் தொடர்ந்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு ஒரே நாளில் கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடித்து லாபத்தை சம்பாதித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்பது தற்போது பார்க்கலாம். அதில் தம்பி ராமையா இயக்குனர், காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also read: அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்

முக்கியமாக இவர் நடித்த கும்கி, கழுகு போன்ற படங்களில் நடித்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் ஒரு நாளைக்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அடுத்ததாக விஜய் டிவி புகழ், குக் வித்து கோமாளி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து படிப்படியாக இவருடைய நடிப்பை காட்டி தற்போது பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் மிஸ்டர், மிருகக்காட்சி சாலை, காப்பாளர் போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஒரு நாள் சூட்டிங்காக 30000 ரூபாய் சம்பளத்தை பெற்று வருகிறார். அடுத்ததாக கதையின் நாயகன், ஹீரோ, வில்லன் போன்ற பல பரிமாணங்களில் நடித்து எப்பொழுதும் பிசியாக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. அப்படிப்பட்ட இவர் ஒரு படத்திற்காக 15 கோடி சம்பளத்தை பெற்று வருகிறார்.

Also read: அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி

அடுத்ததாக சில படங்களின் கதையின் நாயகனாகவும், எதார்த்தமான காமெடியனாகவும் தன்னை நிரூபித்துக் காட்டி வெற்றி பெற்று வருகிறவர் யோகி பாபு. காமெடியன் கதாபாத்திரத்திற்கு சந்தானத்திற்கு அடுத்ததாக யாருமே இல்லை என்று இருக்கும் பொழுது இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்து போய்விட்டது. அந்த வகையில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அதனால் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வரை வாங்கிக் வருகிறார்.

இவர்களுக்கு அடுத்து தன்னுடைய பேச்சை காமெடியாக மாற்றி ரசிகர்கள் ரசிக்கும்படி தற்போது வேற லெவலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் நடித்த டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் மூலம் காமெடியாக தற்போது வளர்ந்து வருகிறார். அந்த வகையில் யோகி பாப்புக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவருடைய வளர்ச்சியினால் யோகி பாபுவின் தூக்கமே தொலைந்து விட்டது என்றே சொல்லலாம். தற்போது வரை ஒரு படத்திற்காக 25 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்று வருகிறார்.

Also read: யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த 4 படங்கள்..சூரி சந்தானம் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்

Trending News