யோகி பாபு நடித்து ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் ஆகும் படம் போட். காமெடியில் ஒரு பக்கம் பட்டையை கிளப்பினாலும் அப்பப்போ கதைகளில் முக்கியமான ஹீரோ வேடங்களிலும் அசத்தி வருகிறார் யோகி பாபு. இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
யோகி பாபு நடிப்பில் கஜானா, கங்குவா, கோட் அந்தகன் என அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர இருக்கிறது. எல்லா படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் போட் படத்தில் ஹீரோ கதாபாத்திரம் பண்ணுவதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுது இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கர்நாடகாவில் இதை கொம்பாலையா ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது. அங்கே இருக்கும் பெரிய நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது கொம்பாலையா பிலிம்ஸ் தான்.கேஜிஎப் படத்தை தயாரித்தது இந்த நிறுவனம் தான்.
மறுபக்கம் போட் படத்துக்கு அடித்த ஜாக்பாட்
எப்பொழுதுமே பெரிய பட்ஜெட்டை படங்களை குறி வைக்கும் இந்த நிறுவனம் யோகி பாபுவின் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போட் படத்தை கைப்பற்றி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதே போல் கேரளாவிலும் போட் படத்தை பெரிய நிறுவனம் ஒன்று வாங்கவிருந்தது .
கேரளாவில் இந்த படத்தை கோகுலம் பைனான்ஸ் கோபாலன் வாங்குவதாக இருந்துள்ளார். ஆனால் இந்தியன் 2 படத்தால் அவருக்கு பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் இவர் யோகி பாபுவின் போட் படத்தை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அங்கே கைராசியான நபர் கோபாலன். இவர் ரிலீஸ் செய்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிவிடும். முதல்முறையாக இந்தியன் 2 தான் இவருக்கு அவப்பெயரை பெற்று தந்துள்ளது.
- சூர்யா பட நடிகையுடன் இணையும் யோகிபாபு
- யோகிபாபு மீது வதந்தியை கிளப்பிய பிஸ்மி
- யோகிபாபு உங்களுக்கு நல்ல மனசு ப்ரோ