புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காசுக்காக இப்படியா பண்றது.. சினிமாவில் நடக்கும் கேவலத்தை சொன்ன யோகி பாபு

வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் தற்போது கதாநாயகர்களாக நடித்து வருவதால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் வெற்றிடமாக இருந்தது. அவற்றையெல்லாம் போக்கும் வகையில் யோகிபாபுவின் வித்தியாசமான நகைச்சுவை ரசிகர்களை பெருமளவில் கவரத் தொடங்கியது.

விஜய்சேதுபதிக்கு அடுத்தபடியாக பல படங்களை யோகி பாபு கைவசம் வைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவிலேயே இவ்வளவு பிஸியாக இருக்கும் யோகிபாபு பாலிவுட்டிலும் கால்ஷீட் கொடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் நிதின் சத்யா தற்போது ஹீரோவாக தாதா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளார். இந்நிலையில் தாதா படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஹீரோவாக நடிக்கும் நிதின் சத்யா புகைப்படத்தை வெளியிடாமல் படக்குழு யோகிபாபுவின் போஸ்டரை வைத்து வெளியிட்டுள்ளனர்.

ஏனென்றால் அந்த ஹீரோவை விட யோகி பாபுவின் மார்க்கெட் தான் தமிழ் சினிமாவில் அதிகமாகியுள்ளது. இதனால் யோகிபாபு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்தாலே மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும். இதனால் கண்டிப்பாக கல்லா கட்டலாம் என்பதால் ஹீரோவின் புகைப்படத்தை விட்டுவிட்டு யோகிபாபு புகைப்படத்தை வைத்து வெளியிட்டுள்ளது.

இதை அறிந்த யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் படத்தில் நண்பர் நிதின் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார், நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன், தயவுசெய்து இதுபோன்ற விளம்பரம் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Yogi Babu

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தற்போது யோகி பாபுவை பாராட்டி வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து யோகிபாபு இவ்வாறு பதிவிட்டு இருப்பது அவரின் நற்பண்பை காட்டுகிறது.

Trending News