ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அம்மா மாதிரி நீயும் பேர் வாங்கிடாத.. ஆக்லெண்ட் திரைப்பட விழாவில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ட்ரெய்லர் வெளியீடு

Kozhipannai Chelladurai: சாமானிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை எந்த ஆடம்பரமும் இல்லாமல் திரையில் காட்டக் கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, போன்ற தரமான படங்களின் வரிசையில் சீனு ராமசாமி அடுத்து இயக்கி இருக்கும் படம் தான் கோழி பண்ணை செல்லத்துரை.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு இருக்கிறார். கோழி பண்ணை செல்லதுரை படத்தில் நடிகர் யோகி பாபு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ட்ரைலரை பார்க்கும் பொழுதே இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிகிறது. படத்தின் ஹீரோ ஏகன் சின்ன வயதில் இருந்தே தன் தங்கையை அப்பா அம்மா இல்லாமல் கஷ்டப்பட்டு வளர்க்கிறான்.

ஆக்லெண்ட் திரைப்பட விழாவில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’

சின்ன சின்ன வேலைகளை செய்து தன் தங்கையை வளர்க்கும் ஏகனின் பெரியப்பாவாக யோகி பாபு வருகிறார். யோகி பாபு தன்னுடைய கோழிப்பண்ணையில் ஏகனுக்கு வேலை போட்டு தருகிறார் அந்த வேலை மட்டும் இல்லாமல் கிடைக்கும் வேலையெல்லாம் செய்து ஏகன் காசு பணம் சேர்க்கிறான்.

யோகி பாபு இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இப்படி காசு சேர்க்கிறாய் என கேட்கும் பொழுது என் தங்கையை சொந்த வீட்டில் குடி வைப்பதற்காகத்தான் என ஹீரோ சொல்வது போல் வசனம் இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் போதே இந்த படம் அண்ணன் தங்கையின் அற்புதமான உறவு, உள்ளே வரும் காதல் பிரச்சனை என நன்றாக தெரிகிறது.

இதில் ஹீரோவுக்கு ஜோடியாக சகாய பிரிகிடா நடித்திருக்கிறார். ட்ரெய்லர் வீடியோ முடியும் பொழுது படத்தின் ஹீரோ தன் தங்கையிடம் அம்மா மாதிரி நீயும் தப்பான பெயர் வாங்கி விடாதே என கெஞ்சுகிறான்.

கோழி பண்ணை செல்லதுரை படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்த படம் அமெரிக்காவின் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

Trending News