சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ஷாருக்கானுடன் இணைந்த பிரபல தமிழ் காமெடியன்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து பாலிவுட் படமான லயன் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

லயன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணியும் நடிக்கிறார். மேலும், சனியா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தில் யோகிபாபு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் தற்போது யோகி பாபு ஒரு பிசியான நடிகராக உள்ளார். இவரது கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் லயன் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டிலும் கால்பதிக்கிறார் யோகி பாபு. இதில் படக்குழு மற்றும் ஷாருக்கான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அட்லி, ஜி கே விஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்துடன் சகோதரர்கள் என யோகிபாபு பதிவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அங்கீகாரமே கிடைக்காத யோகிபாபுக்கு தற்போது ஷாருக்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்திலேயே நயன்தாராவை உருகி உருகி காதலிப்பார் யோகி பாபு.

மீண்டும் நயன்தாராவுடன் இப்படத்தில் நடிப்பதால் இவருக்கு எது மாதிரியான கதாபாத்திரம் இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது யோகி பாபு தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் திறமைக்கு அழகு முக்கியம் இல்லை என்பதை யோகிபாபு தற்போது வரை நிரூபித்து வருகிறார்.

Trending News