வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

யோகி பாபுவின் 200-வது படம்.. மெடிக்கல் மிராக்கலாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்

அமீர் நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமான யோகி பாபு, அதன் பிறகு தற்போது டாப் நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறி உள்ளார்.

இவர் கதாநாயகனாகவும் மண்டேலா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து, அதன் பின் அவர் வரிசையாக ஹீரோ கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக இருக்கும் பொம்மை நாயகி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read: போற உசுரு போராடி போகட்டும்.. ஆஸ்கர் லெவல் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் யோகி பாபுவின் பொம்மை நாயகி ட்ரெய்லர்

இதில் யோகி பாபு தனது மனைவி மற்றும் மகளுடன் வாழும் சராசரி குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து யோகி பாபுவின் 200-வது படத்தைக் குறித்தஅப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கில்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் யோகி பாபுவை சுற்றி கத்தி, கடிகாரம், முதலுதவி பெட்டி, ஊசி, காலண்டர், ஆப்ரேஷனுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற அனைத்தும் உள்ளது.

Also Read: ரெமோ சிவகார்த்திகேயன் போல புதிய வேடத்தில் யோகி பாபு.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போட்டோ

ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழ் சினிமாவிற்கு அவசியமான ஒன்றை வெளிப்படுத்தக்கூடிய படமாக மெடிக்கல் மிராக்கல் இருக்குமாம் .

இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சந்தானம் நடிப்பில் வெளியானது ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் இயக்குனர் ஜான்சன் இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மெடிக்கல் சம்பந்தப்பட்ட படமான இந்தப் படம் யோகி பாபுவின் 200 வது படம் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

யோகி பாபுவின் 200-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

medical-miracel-cinemapettai
medical-miracle-cinemapettai

Also Read: உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

Trending News