அடுத்த வடிவேலுவாக மாறும் யோகி பாபு.. ஒரு நியாயம் வேண்டாமா தலைவரே

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான ஒரு காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கதையின் நாயகனாகவும் அவர் மண்டேலா, கூர்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கடைசி விவசாயி திரைப்படத்திலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது பீஸ்ட், நானே வருவேன், சூரப்புலி உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி பரபரப்பாக நடித்து வரும் யோகி பாபு சமீபகாலமாக படப்பிடிப்பு தளங்களில் ஓவர் அலப்பறை செய்து வருகிறாராம்.

அதாவது காலையில் 9 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தால் 12 மணிக்கெல்லாம் கேரவன் சென்று விடுவாராம். அப்படி அவர் கேரவனுக்குள் சென்று விட்டால் மீண்டும் திரும்பி வருவதற்கு 4 மணி ஆகிவிடுமாம். சரி அதன் பிறகாவது நடிப்பார் என்று நினைத்தால் ஐந்து மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறாராம்.

இதைத்தான் ஒரு காலத்தில் நடிகர் வடிவேலு பாலோ செய்து கொண்டிருந்தார். இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய பட வாய்ப்புகள் அனைத்தும் மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு போனது. மேலும் அவருடைய இந்த நடவடிக்கையால் திரையுலகில் அசிங்கப்படும் போனார்.

தற்போது யோகிபாபுவும் அதையே பாலோ செய்து வருவது படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின் இந்த குணத்தால் பட வாய்ப்புகள் கை நழுவும் அபாயமும் இருக்கிறது. தற்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருக்கும் யோகி பாபு இதையெல்லாம் புரிந்து கொண்டு சற்று அடக்கி வாசித்தால் அவருடைய எதிர்கால சினிமா வாழ்வு சிறப்பாக இருக்கும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →