Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இவ்வளவு நல்லவளா ராதிகா நீ.. ஆட்டம் கண்டு போன கோபி!

இவ்வளவு நல்லவளா ராதிகா நீ.. ஆட்டம் கண்டு போன கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி கொண்டிருப்பதால், இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியல் ஆகவே மாறிவிட்டது. எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட ராதிகா கோபியை சுத்தமாக தூக்கி எறிய முடிவெடுத்துள்ளார். தன் வாயாலேயே […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி கொண்டிருப்பதால், இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியல் ஆகவே மாறிவிட்டது. எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட ராதிகா கோபியை சுத்தமாக தூக்கி எறிய முடிவெடுத்துள்ளார்.

தன் வாயாலேயே தன்னுடைய குடும்பத்தை பற்றிய எல்லா உண்மைகளையும் சொன்னதால் கோபி நல்லவன் ஆகிவிட முடியாது. ஒருவேளை விவாகரத்து வாங்கிய பிறகு பாக்யாதான் கோபியின் மனைவி என்ற விஷயம் தெரிந்தால், நிச்சயம் கோபியை ஏற்று கொள்ள மாட்டேன் எனவும் தற்போது ராதிகா சொல்வது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏனென்றால் ராதிகா, கோபிதான் முக்கியம் என தன்னுடைய இரண்டாவது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாக்யாவிற்கு வில்லியாக இனி வரும் நாட்களில் செயல்படுவார் என நினைத்தபோது திடீரென்று ராதிகா, பாக்யாவின் உயிர் தோழியாகவே நடந்து கொள்கிறாள்.

இதனால் கோபி தன்னுடைய உச்சகட்ட நடிப்பை காட்டினாலும் ராதிகா அதை நம்பத் தயாராக இல்லை. அவன் சொல்வதை எதையும் கேட்க மறுக்கும் ராதிகா, கோபியை வெளியே தள்ளி கதவை அடைகிறாள். இதன் பிறகு ராதிகா வீட்டிற்கு எதார்த்தமாக வரும் பாக்யாவை பார்த்ததும் ராதிகா அதிர்ச்சிக்குள்ளாகிறாள்.

அப்போது ராதிகா, பாக்யாவிடம் தான் தேர்ந்தெடுத்த இரண்டாவது நபரும் தவறானவர் போல் தெரிகிறது. அவருடைய குடும்பத்தை பற்றிய முழு உண்மையும் இப்போதுதான் எனக்கு தெரிகிறது என அழுது புலம்புகிறாள். உடனே பாக்யா அவர் வாயாலேயே உண்மை சொல்வதால் அவர் நல்லவராக இருக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வீர்கள் என வெகுளியாக பேசும் பாக்யாவை ராதிகா கண்டு வியக்கிறான். இப்படிப்பட்ட நல்லருக்கு எந்த துரோகம் செய்யக் கூடாது என கோபியை சுத்தமாக தூக்கி எரிய முடிவெடுக்கிறாள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.