வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீ ஏண்டி என் காலத்துல இல்லாம போன.. பாரதிராஜாவை ஏங்க வைத்த இரவின் நிழல் நடிகை

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்த நடிகைகளை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் இவர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளின் பெயர் ரா-வில் தொடங்கும். பாரதிராஜாவின் படங்கள் கிராமத்தில் உள்ள வயல், வரப்புகளை சுற்றியே இருக்கும்.

அவ்வாறு கிராமத்தின் மனம் மாறாத படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது படங்களில் நடிகராகவும் அசத்தி வருகிறார். சமீபத்தில் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Also Read : பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

இந்நிலையில் என் காலத்தில் நீ ஏண்டி இல்லாம போன என்று சொல்லும் அளவிற்கு பாரதிராஜாவை ஏங்க வைத்துள்ளார் ஒரு நடிகை. பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் ரேகா நாயரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ரேகா நாயர் எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். மேலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்த வருகிறார். இந்நிலையில் இரவின் நிழல் படத்திற்கு பிறகு எல்லோரிடமும் நன்கு பரிச்சியம் ஆகியுள்ளார் ரேகா நாயர்.

Also Read : ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

இரவின் நிழல் படத்தில் நடித்ததற்காக ரேகா நாயர் மீது பல விமர்சனங்களும் ஊடகங்களில் எழுந்து வந்தது. இந்நிலையில் ஒரு ஊடகத்திற்கு ரேகா நாயர் பேட்டி கொடுக்கும் போது பாரதிராஜா தன்னை பற்றி புகழ்ந்து பேசியதை கூறி உள்ளார்.

அதாவது நீ ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு போக வேண்டியவ, என் காலத்தில் நீ இல்லாம போயிட்ட என்று வருந்தியதாக பாரதிராஜா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாலச்சந்தர், பாக்யராஜ் காலத்தில் உனக்கு ஒரு 25 வயது இருந்திருந்தால் நிச்சயம் நீ ஒரு கதாநாயகியாக ஆகி இருப்பாய் என பாரதிராஜா வெளிப்படையாக சொல்லியதாக ரேகா நாயர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் என்ஜாய் பண்றாங்க.. அம்பலப்படுத்திய இரவின் நிழல் நடிகை

Trending News