வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னை அடிக்க நீங்கள் தான் சரியான ஆளு.. ரஜினியே கட்டி வச்சு உரிக்க சொல்லிய வில்லன்

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த கொண்டாடப்படும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தொடர்ந்து காப்பியடிக்கப்பட்டு பல கேங்ஸ்டர் திரைப்படங்கள் உருவானது என சொல்லலாம்.

இன்றும் ரஜினிகாந்த் என்று சொன்னால் பாட்ஷா திரைப்படத்தில் அவர் நடித்த நடிப்பும், வசனங்களும் அவரது ஸ்டைலும் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட இத்திரைப்படத்தில் பல வில்லன்கள் நடித்திருப்பர். அதில் முக்கியமாக ரகுவரனின் மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பு வரும்.

Also Read : ரஜினிக்கு மியூசிக் போட மாட்டேன்.. 2 கோடி சம்பளத்தை உயர்த்தி நாசுக்காக கழண்ட இசையமைப்பாளர்

ஆனால் பாட்ஷா திரைப்படத்தில் இடைவேளைக்கு முன்பு வில்லனாக நடித்தவர் தான் நடிகர் ஆனந்த்ராஜ். அத்திரைப்படத்தில் ஆனந்த்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் ரஜினிகாந்தை கம்பத்தில் கட்டி கட்டையால் அவரை அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதுகுறித்து அண்மையில் பேட்டியில் பேசிய ஆனந்தராஜ், பாட்ஷா படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ரஜினிகாந்த் ஆனந்த் ராஜை அழைத்தாராம்.

அப்போது ரஜினிகாந்தை சந்தித்த ஆனந்தராஜ், பாட்ஷா படத்தில் ஒரு சிறிய காட்சி உள்ளது, அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் பலரையும் அதில் தேர்வு செய்ய பார்த்தோம், ஆனால் நீங்கள் தான் அதற்கு சரியான ஆள், உங்களுக்கு சரி என்றால் நீங்கள் நடியுங்கள் என ரஜினிகாந்த் தெரிவித்தாராம்.

Also Read : ரஜினி ரூட்டை கையில் எடுத்த விஷ்ணு விஷால்.. இன்னமும் வளராமல் போனதற்கு இதுதான் காரணம்

உடனே அது என்ன காட்சி என்று ஆனந்த்ராஜ் கேட்டவுடன், கம்பத்தில் கட்டி விட்டு என்னை அடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்தாராம். இதைக்கேட்ட ஆனந்தராஜ் நான் இந்த காட்சியில் நடித்தால், கட்டாயம் திரையரங்கில் உள்ள ஒட்டுமொத்த ஸ்கிரீன்களும் கிழியும், உங்கள் ரசிகர்கள் என்னையும் கிழித்து தொங்க விடுவார்கள் என தெரிவித்தாராம்.

உடனே ரஜினி அதனால் தான் நான் உங்களை தேர்வு செய்தேன். நீங்கள் என்னை அடிக்கும் போது அந்த மாதிரி எதுவும் நடக்காது. என்னை அடிக்கும் அளவிற்கு தைரியமான வில்லன் என்றால் அது நீங்கள் மட்டும் தான் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போன ஆனந்த்ராஜ் உடனே நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறிவிட்டு ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாராம்.

Also Read : நான் ஒரு துறவி, 50 வருடமாய் ஆடம்பரம் இல்ல.. ரஜினியின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.!

Trending News