Actor Vishal: லோகேஷ் பொறுத்த வரை கதையில் மட்டும் வித்தியாசம் காட்டாமல் நடிக்கும் நடிகர்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதே இவருடைய மிகப்பெரிய சிறப்பாக இருக்கும். அப்படித்தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக டெரரான வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யாவை ரோலக்ஸ் ஆக காட்டி மிரட்டி இருப்பார்.
அந்த வகையில் லியோ படத்திலும் பல மொழிகளில் இருந்து நடிகர்களை தேர்வு செய்து அதில் நடிக்க வைத்திருக்கிறார். அப்படித்தான் நடிகர் விஷாலையும் லியோ படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு அவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் லியோ படத்தில் நடிப்பதற்கு மறுத்திருக்கிறார்.
Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்
அதாவது லோகேஷ், விஷால் இடம் உங்களுக்கான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் தேவைப்படும் அதற்கான நாட்களை நீங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்பொழுது விஷால் கண்டிப்பாக 5 நாள் என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் நான் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அதனால் என்னுடைய முழு கவனமும் அந்தப் படத்தில் தான் இருக்கும். ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டால் என்னுடைய முழு அர்ப்பணிப்பையும் அதில் கொடுத்தால் மட்டுமே எனக்கு திருப்தியை கொடுக்கும். அப்படி இருக்கும் பொழுது என்னால் ஐந்து நாட்களில் வந்து லியோ படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் விஜய்யின் தீவிர ரசிகராக விஷால் இருப்பதால், அவர் நடிக்கும் படத்திலேயே நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும் ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் கவனம் செலுத்த முடியாது என்று நிராகரித்திருக்கிறார். அத்துடன் இவருடைய மிகப்பெரிய ஆசை எப்படியாவது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தான்.
அதாவது ரசிகராக எந்த அளவிற்கு விஜய்யை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை படமாக எடுத்து அதற்கேற்ற மாதிரி நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் காலம் நேரம் கூடும் பொழுது நிச்சயம் என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன் என்று விஷால் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Also read: லியோ படத்தைப் பார்த்த தயாரிப்பாளரின் முதல் விமர்சனம்.. கடுப்பாகி சண்டை போட்ட லோகேஷ்