வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஓவர் வெயிட், ஆன்ட்டி மாதிரி ஆயிட்ட.. 41 வயது நடிகையை கழட்டிவிட்டு இளம் நடிகையை வளைத்துப் போட்ட நடிகர்

ஓவர் வெயிட் போட்டு விட்டதால் தன் காதலியை கழட்டி விட்டு வேறொரு நடிகை பிடித்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர். ஒரே படத்தால் புகழின் உச்சிக்கு சென்ற அந்த நடிகர் இப்போது பேமஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து படம் எடுக்க முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

வசீகர தோற்றம் கொண்ட இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருக்கின்றனர். வயது 40 தாண்டி விட்டாலும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் இந்த நடிகர் தன்னுடன் நடித்த உயர்ந்த நடிகையை காதலிப்பதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. அதற்கு ஏற்றார் போல் நடிகரும் அந்த நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

Also read: டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என்று நினைத்த வேளையில் தற்போது கதையே மாறி இருக்கிறது. அதாவது நடிகர் தன்னுடன் நடித்த இளம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருகிறாராம். தற்போது டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த செய்தி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் உயர்ந்த நடிகையுடன் இவர் ஜோடி சேர வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர். கடைசியில் நடிகர் வேறு ஒரு நடிகையை கரம் பிடிக்க போவது அவருடைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

Also read: 37 வயசு, கவர்ச்சி காட்ட என்கிட்ட என்ன இல்ல.. வாய்ப்பு கேட்டு கெஞ்சும் முத்தின மூஞ்சி நடிகை

ஆனால் இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் தான் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது நடிகை ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய ஒல்லி உடலை குண்டாக மாற்றினார். படம் முடிந்த பிறகு எப்படியும் எடையை குறைத்து விடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த நடிகையால் இப்போது வரை எடையை நினைத்தபடி குறைக்க முடியவில்லை.

இதனால் அவருடைய சினிமா மார்க்கெட்டே ஆட்டம் கண்டது. தற்போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. அது மட்டுமல்லாமல் அந்த நடிகரும் நடிகையின் ஓவர் வெயிட்டை பார்த்து ஜெர்க் ஆகி இருக்கிறார். இதனால்தான் அவர் நடிகையிடம் இருந்து எஸ்கேப் ஆகி இளம் நடிகையை பிடித்து விட்டதாக ஒரு தகவல் திரையுலகில் வேகமாக பரவி வருகிறது.

Also read: பட கதையை நிஜமாக்கிய நடிகை.. தொழிலதிபரை விரட்டி விரட்டி காதல் கல்யாணம் செய்த ஹீரோயின்

Trending News