விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. படத்தின் வசூலும் பல மடங்கு உயர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மோகன்தாஸ், ஆர்யன், லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இவரும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
அத்துடன் விஷ்ணு விஷாலுக்கு சினிமாவில் அதிக அளவில் கை கொடுத்து தூக்கிய விட்டது தயாரிப்பாளர் சி வி குமார். இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் முண்டாசுப்பட்டி. இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது தயாரிப்பாளர் சி வி குமார் தான் முக்கிய காரணம்.
Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?
இதனை தொடர்ந்து அடுத்த படத்திலும் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் உறுதியாக சொல்லி இருக்கிறார். அவரும் தயாரிப்பாளர் சொன்னதற்காக அவர் இயக்கிய படமான இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைத்தார். இப்படமும் ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் லாபத்தை கொடுத்தது.
இதற்குப் பிறகு விஷ்ணு விஷால் எத்தனையோ படங்களில் நடித்து இவருக்கு என்று கொஞ்சம் ரசிகர்களை பிடித்து விட்டார். அதிலும் கடைசியாக வந்த கட்டா குஸ்தி படம் பெரிய வரவேற்பு ஏற்படுத்தியது. அதன் பிறகு அதே தயாரிப்பாளர் மற்றொரு படத்திற்காக இவரை நடிப்பதற்கு கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு விஷ்ணு விஷால் ஒரு கோடி சம்பளத்தை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
Also read: 2வது பொண்டாட்டி வந்த நேரம்.. விஷ்ணு விஷால் லயன் அப்பில் இத்தனை படங்களா?
ஆனால் தயாரிப்பாளர் நீங்கள் கேட்ட சம்பளத்தை என்னால் தர முடியாது. இந்த படம் கம்மி பட்ஜெட்டில் தான் எடுக்கப் போகிறோம். அதனால் அதற்கு ஏற்ற சம்பளத்தை நாங்கள் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார் . அதற்கு விஷ்ணு விஷால் அப்படி என்றால் என்னால் நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். அடுத்ததாக அந்த தயாரிப்பாளர் இவர் இல்லை என்றால் பரவாயில்லை இவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டார்.
தற்போது விஷ்ணு விஷாலுக்கு பதிலாக நடிக்க வரும் அந்த ஹீரோ ஹிப் ஹாப் தமிழா. இப்படி கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் நழுவ விட்டுவிட்டார். ஆனாலும் இந்த படத்தில் நடித்திருக்கலாம். ஏனென்றால் இவர்களுடைய காம்போவில் வந்த இரண்டு படங்களுமே விஷ்ணு விஷாலுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவருடைய பேராசையால் வாய்ப்பை இழந்து விட்டார்.
Also read: இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் படிச்சது நான் தான்.. ஹிப் ஹாப் தமிழா பெருமிதமான பேச்சு