Gossip: அந்த இளம் நடிகருக்கு சமீப காலமாக என்ன ஆச்சு என்று தெரியவில்லை. திடீரென சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் இந்த நடிகர்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சம் கிடையாது. மரியாதைன்னா என்ன விலை என கேட்கும் இவர் அடித்த லூட்டி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. ஆனால் அதுவே இவருக்கு பப்ளிசிட்டியையும் கொடுத்தது.
அதைத்தொடர்ந்து ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்பட்டு ஒரு சர்ச்சையை கிளப்பினார். தற்போது மாஸ் ஹீரோவுக்கு சப்போர்ட் செய்து இவர் போட்ட மெசேஜ் பெரிய இடத்தை சீண்டி பார்த்துள்ளது.
சொந்த செலவில் சூனியம் வைத்த ஹீரோ
இரு தரப்பு ரசிகர்களும் பொங்கிய நிலையில் இளம் நடிகர் அசராமல் அனைவருக்கும் பதில் கொடுத்து வருகிறார். அதிலும் வாரிசு பிரபலத்தை குறிவைத்து இவர் தொடர்ந்து பேசி வருவது இவருக்கே ஆப்பாக முடியும் நிலையில் இருக்கிறது.
ஏற்கனவே தன்னுடைய கெரியருக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டார். இதில் பெரிய இடத்தையும் தேவையில்லாமல் இவர் பகைத்து வருகிறார்.
ஆனால் இவர் இவ்வளவு தைரியமாக சீண்டுகிறார் என்றால் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் ஏதோ தன்னை பெரிய ஹீரோ என்று நினைத்துக் கொண்டு இவ்வாறு அளப்பறை கொடுக்கிறார் என இவரை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.
தேவையில்லாமல் சீண்டி பார்க்கும் நடிகர்
- நடிகையின் அக்காவுக்கு ரூட் போட்ட ஹீரோ
- சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கூத்து, முகத்திரையை கிழித்த இயக்குனர்
- தொடர் தோல்வியால் கதறிய நடிகையை அரவணைத்த ஹீரோ