வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கெஸ்ட் ஹவுஸ் கூப்பிட்ட பிரபல நடிகர்.. வாய்ப்பே வேண்டாம் என தெறித்து ஓடிய இளம் நடிகை

தற்போது பலரும் யூட்யூபில் சொந்தமாக சேனல்களை ஆரம்பித்து ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அதில் பல இளம் தலைமுறையினர் வெப் தொடர்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஒரு தொடரில் நடித்து பிரபலமானவர் தான் அந்த இளம் நடிகை. பார்ப்பதற்கு அமுல்பேபி போன்று இருக்கும் அந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அதன் காரணமாகவே அந்த வெப் தொடர் சக்கை போடு போட்டது.

தற்போது அந்த இளம் நடிகை ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பற்றி தன் தோழிகளிடம் கூறி புலம்பியிருக்கிறார். தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் சினிமாவில் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த இளம் நடிகைக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் நடிகைக்கு பிடித்த பிரபல நடிகருடன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகையும் சந்தோஷமாக சம்மதித்திருக்கிறார். இதன் மூலம் சினிமாவில் பெரிய நடிகையாக வந்து விடலாம் என்று ஆசையோடு இருந்த நடிகைக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சம்பந்தப்பட்ட அந்த பிரபல நடிகர், நடிகைக்கு போன் செய்து கேரக்டர் பற்றிய தகவல்களை கூறி விட்டு இறுதியாக கெஸ்ட் ஹவுஸ் வரும்படி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன நடிகை இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி காலை கட் செய்து இருக்கிறார்.

தற்போது வாய்ப்பு கிடைக்காமல் போனது கூட அந்த நடிகைக்கு அவ்வளவு வருத்தம் இல்லை. ஆனால் நடிகரின் அந்த சுயரூபம் தான் நடிகையை வருத்தப்பட வைத்துள்ளது. இதைப்பற்றி நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்.

- Advertisement -spot_img

Trending News