Gossip: இப்போதெல்லாம் கண் கூச வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டுவது எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த சூழலில் எந்த வரம்பும் இன்றி இஷ்டத்துக்கு இருக்கின்றனர் இளம் நடிகைகள்.
அதில் பட வாய்ப்பு பெறுவதற்காகவே சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை இறக்குவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. வளர்ந்து வரும் நடிகைகள் முதல் வாய்ப்பு தேடும் இளம் பெண்கள் வரை இந்த யுக்தியை தான் ஃபாலோ செய்கின்றனர்.
அதில் ரியாலிட்டி ஷோ மூலம் சர்ச்சைக்கு ஆளான அந்த நடிகையும் ஒருவர். தற்போது பிரபலமாக இருக்கும் ஹீரோவை வைத்து அந்த ஷோவில் இவர் பப்ளிசிட்டி தேடினார். ஆனால் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான நடிகை பிறகு வாய்ப்பு தேடுவதில் பிஸியானார்.
நடிகையின் கவர்ச்சி தரிசனம்
அதன் பலனாக சில படங்களில் தலைகாட்டிய அவருக்கு இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. அதனால் கடை திறப்பு விழா, விளம்பர படங்கள் என கல்லாகட்டி வருகிறார்.
அது மட்டும் இன்றி தன் சோசியல் மீடியா பக்கத்தில் அபாயகரமான கவர்ச்சி புகைப்படங்களை தட்டி விட்டு ரசிகர்களை சோதித்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட பிகினி உடை போட்டோ இணையத்தையே கிடுகிடுக்க வைத்தது.
ஏற்கனவே ஒரு நடிகை இப்படித்தான் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டு வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அது எதுவும் வொர்க் அவுட் ஆகாத நிலையில் அம்மணி இப்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரை போல் இந்த நடிகையும் எப்போது இதையெல்லாம் ஓரம் கட்ட போகிறாரோ தெரியவில்லை.
பட வாய்ப்புக்காக மோசமாக இறங்கிய நடிகை
- திருமணமான நடிகரை வசியம் செய்ய பார்த்த சேச்சி
- மூன்றெழுத்து நடிகருக்கு கும்பிடு போட்ட ஹீரோ
- ஓவர் சீன் போட்டு கடுப்பேத்தும் சில்வண்டு