புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தகர்ந்து போன ஹீரோயின் கனவு.. இதுக்கு மேல முடியாதுன்னு பொட்டியை கட்டிய நடிகை

Gossip: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின் கனவுடன் வந்த அந்த நடிகை இப்போது நொந்து போயிருக்கிறார். வந்த வேகத்தில் கைநிறைய படங்களை அள்ளிய அந்த நடிகை எப்படியும் முன்னணி இடத்திற்கு வருவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் நடிகையின் நேரமோ என்னமோ தெரியவில்லை நடித்த படங்கள் எல்லாமே தோல்வி தான். இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு சோசியல் மீடியா ட்ரோலுக்கும் ஆளானார்.

சமீபத்தில் கூட வேர்ல்ட் ஹீரோவின் படம் வெளியாகி மொக்கை வாங்கியது. அதற்கும் கூட நடிகையின் ராசி தான் என பேசப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சினிமாவுக்கு குட்பை சொல்லலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.

நடிகையை சுற்றும் தோல்வி

ஏற்கனவே நடிகை நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய போவதாக கூறப்பட்டது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் அதுதான் சரியாக இருக்கும் என அவர் கல்யாணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

தற்போது கைவசம் சில படங்கள் இருக்கும் நிலையில் அது வெற்றி கண்டால் நடிப்பை தொடரலாம். இல்லையென்றால் குடும்பம் குழந்தை குட்டி என செட்டில் ஆகி விடலாம் என நடிகை யோசித்து வருகிறாராம். ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து இவருக்கு போட்டியாக வந்த அந்த நடிகையும் இப்படித்தான் பரபரப்பை கிளப்பினார்.

ஆனால் இடையில் வேறு ஒரு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு தற்போது வாய்ப்புகளே இல்லாமல் முடங்கி போயிருக்கிறார். ஆக மொத்தம் இருவருடைய ஹீரோயின் கனவுக்கோட்டையும் தற்போது தகர்ந்து போய்விட்டது.

திருமணத்திற்கு தயாராகும் உயர்ந்த நடிகை

Trending News