மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்த அந்த நடிகை சமீபத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் நடிகைக்கும் ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
முதல் படத்திலேயே பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்ததால் நடிகை மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். மேலும் நடிகையை தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம். அதன் பலனாக நடிகை தற்போது பிரபல நடிகர் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி நடிகையின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் நிலையில் அவரிடம் கதை சொல்வதற்கு பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதனால் நடிகை எப்படியும் முன்னணி நடிகையாக மாறி விடுவோம் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
மேலும் தான் அறிமுகமான ஒல்லி நடிகருடன் மீண்டும் எப்படியாவது ஒரு படத்தில் இணைந்து நடித்து விட வேண்டும் என்று நடிகை தீவிரமாக இருக்கிறாராம். அவரால் தான் நமக்கு இவ்வளவு பிரபலம் கிடைத்தது என்று நினைக்கும் நடிகை தற்போது ஒரு புது முயற்சியை செய்து வருகிறார்.
அதாவது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நடிகை எப்படியாவது அந்த நடிகருடன் என்னை நடிக்க வையுங்கள் என்று அடம்பிடித்து வருகிறாராம். அந்த நடிகரோ தற்போது ஹாலிவுட், பாலிவுட் என்று கலக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை இப்படி பகல் கனவு கண்டு கொண்டிருப்பது எங்கு போய் முடியப் போகிறதோ என்று அவரைப்பற்றி திரையுலகில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நடிகை தன் முடிவில் அதிக தீவிரம் காட்டி, முயற்சி எடுத்து வருகிறார்.