வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

நடிகையுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த இளம் நடிகர்.. அம்பலமான ஒரு வருட பலான கதை

ஒரு சர்ச்சையான திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் அந்த இளம் நடிகர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு சினிமாவில் அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார்.

அதன் பிறகு பிரபல சேனலில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. இதனால் அந்த நிகழ்ச்சியை விட்டு வந்த உடனே இவருக்கு திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது.

பிரபல இசையமைப்பாளரின் தயாரிப்பில் வெளியான அந்த காதல் திரைப்படத்தில் இவர் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார். அதே திரைப்படத்தில் தான் இவர் உடன் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் நடிகையும் ஹீரோயினாக புக் செய்யப்பட்டார்.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் பல நெருக்கமான காட்சிகளில் சாதாரணமாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று இருப்பதாக பல கிசுகிசுக்களும் வெளிவந்தது.

இதைப் பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் போதே மிகவும் நெருக்கமாக பழகி வந்த இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

தற்போது இந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்ட பலரும் நடிகையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மிகவும் கூலாக ஆமாம் என்று பல நாள் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். ஒரே வீட்டில் இப்படி பஞ்சும், நெருப்பும் பக்கத்தில் இருந்தால் வேறு என்ன நடக்கும். இந்த பலான சங்கதியை கேள்விப்பட்ட குடும்பம் என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை.

- Advertisement -spot_img

Trending News