சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முரட்டு இயக்குனருடன் டைம் பாஸ் செய்து வரும் இளம் ஹீரோயின்.. ஹீரோவை கூட கண்டுக்கலையாம்

அந்த முரட்டு இயக்குனர் எது செய்தாலும் அது சர்ச்சை தான். அவருடைய படங்கள் விருதுகளை வாரி கொடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்காக அவர் நடிகர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாது.

சமீபத்தில் கூட இளம் நடிகை இயக்குனரை பற்றி பல விஷயங்களை சொல்லி இருந்தார். ஆனால் அதெல்லாம் இல்லை இயக்குனர் தங்கமானவர் என நடிகை திடீர் அந்தர் பல்டி அடித்து விட்டார். அதனால் பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது.

Also read: மாஸ் ஹீரோவின் வளர்ச்சியால் ஆட்டம் கண்ட வாரிசு.. அசால்டாக நினைத்து அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பிரபலம்

ஆனால் இப்போது இயக்குனர் பற்றி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியாக தான் உள்ளது. தற்போது அவர் படத்தில் நடித்திருக்கும் புது முக நடிகை இயக்குனரின் கண்ட்ரோலில் தான் இருக்கிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இயக்குனர் அவரிடம் ரொம்பவும் பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் அடி வெளுக்கும் இயக்குனர் இவரை மட்டும் ஒன்றுமே சொல்லவில்லையாம். எப்படி நடிக்க வேண்டும் என அன்போடு அவர் சொல்லிக் கொடுத்ததை பார்த்து யூனிட்டே அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. அவ்வளவு ஏன் இயக்குனர், ஹீரோவை கூட கண்டு கொள்ளவில்லையாம்.

அந்த படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஆனாலும் இயக்குனர் ஹீரோயினை டப்பிங் பேச வேண்டும் என காரணம் சொல்லி வெளியில் அழைத்துச் சென்று வருகிறாராம். ஹீரோயினும் அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்த ஹீரோ தான் இப்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

Also read: கேரவனில் நடிகை உடன் டேட்டிங்.. ஓவர் ஆட்டம் போடும் இளம் நடிகர்

Trending News