வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

10வது படிக்கும்போதே இசையில் மெய்சிலிர்க்க வைத்த இசைஞானியின் வாரிசு.. வியந்து பார்த்த திரையுலகம்

Ilaiyaraaja Son: சுமார் 10,000 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசைஞானியாக பார்க்கப்படும் இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் சினிமாவில் இசைஞானியின் வாரிசு என்பதை நிரூபித்து இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பத்தாவது படிக்கும் போதே இசைஞானியின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா ஒரு படத்தின் பாடலுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தது திரை உலகமே வியந்து பார்க்க வைத்தார். இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’.

Also Read: ஹிட் கொடுத்து காணாமல் போன 6 இசையமைப்பாளர்கள்.. ஜென்டில்மேன் 2-வில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஆஸ்கர் நாயகன்

இந்த  படத்திற்கு இயக்குனர் வசந்த் இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார், ஆனால் அவருக்கு நேரமில்லை. அப்போது தன் மகனை வேணா பயன்படுத்திக்கோ என்று இளையராஜாகூறியுள்ளார். அப்போது யுவன் சங்கர் ராஜா பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்தார்.

இயக்குனர் வசந்த்க்கு நம்பிக்கை வரவில்லை, அப்பொழுது ஒரு பாடல் போட்டுக் காட்டும் படி கூறியிருக்கிறார். அப்போது போட்ட பாட்டு தான் ‘இரவா பகலா குளிரா வெயிலா’ என்ற பாடல். வசந்த் தன்னை மறந்து இளையராஜா வேண்டாம் நீ தான் இசையமைக்க வேண்டும் என்று அவர் இசையமைக்க வைத்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார்.

Also Read: என்ன கேவலமா கூட படத்துல காட்டிக்கோ.. விளம்பரத்திற்காக மேடையில் கூச்சநாச்சம் இல்லாமல் பேசும் மிஸ்கின்

இந்த படம் சுமாரான வெற்றி, ஆனால் பாடல்கள் இன்றுவரை மெகா ஹிட். இந்தப் படத்தின் இடம்பெற்ற பாடல் மூலம் தான் ஜோதிகாவும் புகழ் பெற்றார். இன்றளவும் யுவன் சங்கர் ராஜா நிலைத்திருக்க அவரது திறமையும் அவர்கள் ரசிகர்களும் தான் காரணம்.

தற்போது வேண்டுமானால் யுவன் சங்கர் ராஜாவிற்கு சரியான பட வாய்ப்புகள் வராமல் இருக்கலாம். ஆனால் இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தன்னை யார் என்று பள்ளி படிக்கும்போதே நிரூபித்து காட்டி திரையுலகையே வியந்து பார்க்க வைத்துள்ளார்.

Also Read: இளையராஜாவின் டார்ச்சர் தாங்க முடியல.. இசையமைப்பாளரான 2 இயக்குனர்கள், செம ஹிட்டான பாடல்கள்

Trending News