Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

“உன் தியேட்டரே இருக்காது பார்த்துக்கோ!” – திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய பகீர் போஸ்டர்!

“உன் தியேட்டரே இருக்காது பார்த்துக்கோ!” – திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய பகீர் போஸ்டர்!

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு எதிராக தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது கவனம் பெற்றுள்ளது. நடிகர் அஜித்தின் போட்டோவுடன் திருப்பூர் சுப்பிரமணியத்தின் போட்டோவையும் இணைத்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், “எச்சரிக்கை!! இத்தனை வருடம் தல படத்தைப் போட்டு பிச்சை எடுத்து சம்பாதித்துவிட்டு இப்போ அவருக்கே எதிராகப் பேசுறியா? உன் தியேட்டரே இருக்காது பார்த்துக்கோ!!” என்று கடுமையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், இந்த போஸ்டர் தேனி மாவட்ட அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்து வரும் நிலையில், அவருடைய போட்டோவை நேரடியாகப் பயன்படுத்தி இந்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக,அஜித் படங்களைத் திரையிட்டு அதன் மூலம் சம்பாதித்துவிட்டு,தற்போது அஜித்துக்கு எதிராகப் பேசுவதாகக் குற்றம்சாட்டும் வகையில் போஸ்டரில் வாசகங்கள் அமைந்துள்ளன.

மேலும்,அவரது தியேட்டரே இல்லாமல் போய்விடும் என்ற மிரட்டல் தொனியிலான வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் திருப்பூர் சுப்பிரமணியத்தைக் குறிவைத்தே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. தேனி மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.