வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2வது முறை மிஸ் பண்ணாமல் கரம் பிடித்த யூடியூப்பர் இர்ஃபான்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

பொதுவாக நாம் அனைவரும் தற்போது அதிக நேரம் செலவிடுவது சோசியல் மீடியாவில் தான். இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் ஈசியாக பொழுது போக்குவது யூடியூப். அதனால் பலரும் இதன் மூலம் அவர்களிடம் இருக்கும் திறமையை வைத்து சம்பாதிக்கும் விதமாகவும் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டில் பிரபல யூடியூப்பராக வலம் வருபவர் தான் இர்ஃபான்.

இவர் சொந்தமாக இர்ஃபான் வியூ என்கிற யூடியூப் சேனலை 35 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் பின் தொடர்கின்றனர். இவருடைய முக்கியமான வேலையே பல்வேறு இடங்களுக்கு சென்று வித விதமான உணவுகளை சுவைத்து அதனை விமர்சித்து வீடியோவாக பதிவிட்டு பிரபலமானார். இதை வைத்து சினிமாவில் இருக்கும் பிரபலங்களை நேரடியாக பேட்டி எடுத்து அவர்களுடன் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வருவார்.

Also read: யானைக்கு நிகழ்ந்த அநியாயத்தின் கதை.. படம் மூலமாக மனிதருக்கு கொடுக்கும் சவுக்கடி

தற்போது இவர் சினிமாவிலும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படி யூடியூப் மூலமாக ஃபேமஸ் ஆன இவருக்கு கடந்த வருடம் ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆனது. நிச்சயதார்த்தம் நடந்த பிறகு திருமணம் நடக்கும் நேரத்தில் இவரே இவருடைய திருமணத்தை நிறுத்தி விட்டார். அது குறித்து இவர் கூறியது எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கருத்துக்களில் வேறுபாடு அதிகம் இருப்பதாகவும், அத்துடன் எங்கள் இருவருக்குமே செட்டாகவில்லை என்பதால் என்னுடைய திருமணத்தை நிறுத்தி விட்டேன் என்று இவரை கூறியிருக்கிறார்.

அதன்பிறகு இவர் இப்போதைக்கு என்னுடைய திருமணம் இல்லை என்று முடிவெடுத்து விட்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் சில மாதங்களாக தனிமையில் இருந்த இவர் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார். அதனால் கல்யாண பத்திரிகையை தயார் செய்து அதை நடிகர் கமலஹாசனிடம் கொடுத்து அதையும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Also read: 48 வருடங்கள், 350 படங்கள்.. 70 வயதிலும் நடிப்பை விடாத ரஜினி பட நடிகை

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இவருடைய ஹல்தி பங்க்ஷனில் கலந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகர் கவின், அருண், அரவிந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இன்று இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எது எப்படியோ நல்லபடியாக இரண்டாவது முறையாக மிஸ் பண்ணாமல் திருமணத்தை செய்து கொண்டார். மேலும் இனி மனைவி கையால் சாப்பிட்டாவது உன்னுடைய எடையை குறைத்துக் கொள் என்று இவருடைய நண்பர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். நாமும் இவருடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம். வாழ்க பல்லாண்டு.

இர்ஃபானின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்

irfan marriage-cinemapettai

Also read: சிம்புக்காக ரிஸ்க் எடுக்கும் கமல்.. பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் ஹீரோயின்

Trending News