வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Savukku Shankar: அதிரடியாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்.. காவல்துறை நடவடிக்கையின் பின்னணி இது தான்

Savukku Shankar: இன்று காலையில் இருந்தே சோசியல் மீடியா மிகவும் பரபரப்பாகிவிட்டது. யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான பல விஷயங்களை பேசி வருபவர் தான் இவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உதயநிதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவர் பற்றியும் இவர் படுமோசமாக பேசி வந்தார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்

அது மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள் பற்றியும் பெண் காவலர்கள் பற்றியும் அவதூறாக பேசியிருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்தது.

ஆனாலும் சவுக்கு சங்கர் தொடர்ந்து இதேபோன்று பேசி வந்த நிலையில் இன்று தேனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி இருக்கிறது. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படி பரபரப்பாகி இருக்கும் இந்த கைது நடவடிக்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தான் மீடியாக்கள் உற்று நோக்கி வருகின்றனர். சனி, ஞாயிறு கோர்ட்டு விடுமுறை என்பதால் திங்கள் கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News