திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பொதுவாக சரித்திர படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதனாலேயே தற்போது பல இயக்குனர்கள் அது போன்ற கதைகளத்தை தேட ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஒரு முன்னோடியாக இருந்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் தட்டிச் சென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் பாண்டியர்களுக்கும் எயினர் குலத்திற்கும் நடக்கும் போராட்டம் பற்றிய சரித்திர கதையாக வெளிவந்த படம் தான் யாத்திசை. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்தது.

Also read: காலி பெருங்காய டப்பாவான மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் 2வை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் இப்போது வரை மூன்று கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் இப்போது பொன்னியின் செல்வன் 2 வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக யாத்திசை படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2-ல் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் படத்தின் வசூல் ஏறுமுகமாகவே இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஆன்லைன் புக்கிங் நல்ல கலெக்சனை பெற்ற நிலையில் தற்போது முதல் நாளிலேயே இப்படம் இந்தியாவில் மட்டுமே 35 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.

Also read: தங்கலான் கெட்டப்பில் வந்த கரிகாலனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. என்ன கொடுமை சார் இது.!

அதைத்தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றுமே கலெக்சன் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது உள்ள நிலவரப்படி உலக அளவில் பொன்னியின் செல்வன் 2, 100 கோடியை நெருங்கி இருக்கிறது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் பாகத்திலேயே மொத்த பட்ஜெட்டையும் வசூலித்திருந்தது.

அதனால் இப்போது வரும் கலெக்சன் அனைத்துமே தயாரிப்பு தரப்புக்கு லாபம் தான். அது மட்டுமல்லாமல் கோடைகால விடுமுறையும் ஆரம்பித்து இருப்பதால் இந்த வசூல் இன்னும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது. இப்படி சரித்திர பின்னணியில் வந்த சோழ, பாண்டியர்கள் இருவருக்கும் வசூலில் சரியான போட்டி நிலவி வருகிறது.

Also read: சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

Trending News