சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

யுவன்-தனுஷ் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. குத்தாட்டம் போட வைத்த ரவுடி பேபி

இசைஞானி இளையராஜாவின் தவப்புதல்வனான யுவன் சங்கர் ராஜா தற்போதுள்ள இளைஞர்களின் இசை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு உயிர் இருக்கும். இவருக்கு போட்டியாக இருக்கும் அனிருத் தனுஷுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.  அதேபோன்று யுவன்-தனுஷ் கூட்டணியில் வெளியான 5 படங்கள் ஹிட் அடித்தது. அதிலும் மாரி 2 படத்தின் ரவுடி பேபி சாங் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.

துள்ளுவதோ இளமை: 2002ல் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படத்தை செல்வராகவன் திரைக்கதை எழுதி தந்தையுடன் இணைந்து இயக்கி இருப்பார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அதில் இடம் பெற்றிருக்கும் பாடல்களும் அதன் வரிகளும் நம்மை இளமைப்பருவத்தில் அழைத்து சென்றுவிடும். அந்த அளவிற்கு யுவனின் இசை மனதை வருடும்.

Also Read: தனுஷ் கேரியரை தூக்கிவிட்ட6 படங்கள்.. அஸ்திவாரம் போட்டு கொடுத்த செல்வராகவன்

காதல் கொண்டேன்: 2003ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கொண்டேன் படம்தான் தனுசை நன்கு நடிக்கக் கூடியவர் என வெளி உலகத்திற்கு காட்டி அவருடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில் தனுஷ் அனாதையான கல்லூரி மாணவராக நடித்திருப்பார். இதில் கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார்.

இந்தப்படத்தில் தனுஷ் சோனியா அகர்வாலை ஒரு தலையாகக் காதலித்ததால், இதில் யுவனின் இசையில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் காதல் தோல்வியடைந்த காதலர்களுக்கும், அதை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களின் மனதிற்கு மருந்தாக அமைகிறது.

யாரடி நீ மோகினி: கடந்த 2008 ஆம் ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான காதல் திரைப்படம் தான் யாரடி மோகினி. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களான ‘எங்கேயோ பார்த்த’, ‘ஒரு நாளைக்குள்’, ‘நெஞ்சை கசக்கி’, ‘பாலக்காட்டு பக்கத்திலே’ போன்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை இன்றுவரை ரிப்பீட் மோடில் கேட்க வைத்துக்கொண்டிருக்கிறது.

Also Read: அந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற யுவன் சங்கர் ராஜா.. அவரே கூறிய உண்மை

புதுப்பேட்டை: யுவன் சங்கர் ராஜா இசையமைத்து செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுத் தந்த இந்த படத்தில், சிறுவயதிலேயே ரவுடி கும்பலிடம் சிக்கிக்கொண்ட தனுஷ், விரைவில் தன்னுடைய முதலாளியின் வலது கையாக மாறி ஆபத்தான எதிரிகளை உருவாக்குகிறார்.

பிறகு தனுஷ் அரசியல்வாதியாக மாறி அதன் பிறகு ரௌடி என்ற தன்னுடைய முகத்தை அரசியல்வாதியாக மாற்றிவார். இப்படி தனுஷின் ஒரு மாஸ் ஹீரோவை முதல்முதலாக காண்பித்த பெரிய பங்கு யுவன் சங்கர் ராஜாவிற்கும் உண்டு. இதில் இடம்பெற்றிருக்கும் ‘எங்க ஏரியா உள்ள வராதே’ பாடல் என்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறத

மாரி 2: 2015 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த மாரி படத்தின் தொடர்ச்சியாக, 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் தனுஷ் பாடி, யுவன் இசையமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்தது மட்டுமல்லாமல், கேட்பவர்களையும் குத்தாட்டம் போட வைத்தது.

Also Read: நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்

நானே வருவேன்: செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். தற்போது இந்தப்படத்திலும் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது

இவ்வாறு அனிருத் மட்டுமல்ல யுவன் சங்கர் ராஜாவும் தனுசுக்கு லக்கி தான் என்பதை இந்த ஐந்து படங்களும் நிரூபித்து, அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News