சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

குடி, சிகரெட்னு ரொம்ப மோசமா.. அம்மாதான் எல்லாமே.. கண் கலங்கிய யுவன்

தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன் சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார்.

யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் 1997ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன்’ என்ற அடையாளத்தைக் கடந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்தார் யுவன்.

இப்பேற்பட்டவர் சில காலங்களுக்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் இப்போதெல்லாம் குட் பாயாக இருக்கிறார். இதற்க்கு காரணம் ஒரு வகையில் அவர் அம்மா தானாம். அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. யுவனுக்கு அப்படி தான். அம்மா என்றால் உயிர்.

அம்மா இறந்து போன நாட்கள்..

இதை அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அம்மாவை பற்றி அவர் கூறும்போது, லைட்டா கண் கலங்கி விட்டார். “அம்மா இறந்ததும் அம்மாவை என் மனம் என்றும் தேடி கொண்டே இருக்கிறது. எனக்கு கனவுகள் மூலமாக அம்மா வந்திட்டே இருக்காங்க. இந்த ஒரு தேடலில் தான் நான் கடவுளை புரிந்து இருக்கேன். முதன்முறையாக கடவுளின் நினைப்பு வந்தது. அப்போது, நான் யாருடைய மனதை எல்லாம் காயப்படுத்தினேனோ, அதை நினைத்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று மனதார கடவுளிடம் மன்னிப்புக் கேட்டேன்.”

“எல்லாத்துக்குமே அம்மாகிட்ட தான் போவேன். ஒருநாள் அவங்க இல்லை அப்படின்னு முடிவானதும், என்ன செய்றதுன்னு தெரியல. அம்மா இறந்தவுடன் சிகரெட் குடிக்கவும், மது அருந்தவும் ஆரம்பித்தேன். அதன்முன்பு, பார்ட்டி போய் இருக்கிறேன். ஆனால், சிகரெட், மது என்று எதையும் தொட்டதில்லை. ஒரு கட்டத்தில் இதெல்லாம் நமக்கு மேல் ஒருத்தன் எழுதிட்டான் என்று புரியுது.”

இப்படி அம்மாவை பற்றி பேசி இருக்கிறார் யுவன். அம்மா மீது இவர் கொண்டிருக்கும் அன்பு இவர் இசைமைத்த அம்மா பாடல்கள் நமக்கு உணர்த்தும்.

- Advertisement -spot_img

Trending News