ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நெகட்டிவ் கமெண்டால் நொந்து போன யுவன்.. இன்ஸ்டாவையே டெலிட் செய்ய இதுதான் காரணம்

Yuvan Shankar Raja : யுவனின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். இசை குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு ரத்தத்திலேயே இசை ஊறி போய்விட்டது.

அஜித்தின் என்ட்ரி சாங்கில் இவர் போடும் மியூசிக்கை கேட்டு திரையரங்கையே அதகளம் செய்து விடுவார்கள் ரசிகர்கள். மேலும் யுவனுக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் எப்போதும் இருந்தார்கள்.

இந்நிலையில் நெகட்டிவ் கமெண்ட்ஸால் தனது இன்ஸ்டாகிராமை டெலிட் செய்து உள்ளார் யுவன் சங்கர் ராஜா. அதாவது வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலுமே யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருவது வழக்கம்.

இன்ஸ்டாக கணக்கை டெலிட் செய்துள்ள யுவன்

அந்த வகையில் வெங்கட் பிரபுவின் கோட் படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இதற்கு முன்னதாக விஜய்யின் புதிய கீதை படத்தில் யுவன் பணியாற்றிய பிறகு நீண்ட வருடங்கள் கழித்து இப்போதுதான் அவரது படத்திற்கு இசையமைக்கிறார்.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு என்ற பாடல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. மதன் கார்கியின் வரிகளில் உருவான இந்த பாடலில் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பாடலின் இசை விஜய் ரசிகர்களையே ஈர்க்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் மோசமான விமர்சனங்கள் வர தொடங்கியது. இதுவரை யுவன் பழமொழிகளில் 170 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த அளவுக்கு மனவேதனை படும்படியான மோசமான விமர்சனங்களை இதுவரை யுவன் சந்தித்ததில்லை. மேலும் தொடர்ந்து அவரது இன்ஸ்டா பதிவின் கீழ் மோசமான கமெண்ட் வந்ததால் தனது கணக்கை டெலிட் செய்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால் யுவன் சங்கர் ராஜா உடைய இன்ஸ்டா கணக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடக்கப்பட்டுள்ளதாம். இப்போது அவருடைய குழு கணக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மிக விரைவில் மீண்டும் இன்ஸ்டாவில் யுவன் வர இருக்கிறார்.

Trending News