புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் மகனுக்கு இவரை தான் ரொம்ப பிடிக்குமாம்.. மேடையில் சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவரது மகன் பிரபல இசையமைப்பாளரின் ரசிகன் என்பது சமீபத்திய பேட்டியில் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல இசையமைப்பாளர் விஜய்யின் மகன் தனது இசைக்கு ரசிகன் எனக் கூறியுள்ளார். அவர் யார் என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.

இளையராஜா மகன்தான் யுவன் சங்கர் ராஜா என சினிமாவின்ஆரம்பத்தில் பெயரை கிடைத்திருந்தாலும் அதன்பிறகு இவர் இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவ யுவனுக்கு தமிழ்சினிமாவில் தனி இடம் கிடைத்தது. யுவனின் இசையில் ஏராளமான பாடல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் யுவனின் தீம் மியூசிக்கு மட்டுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த அளவிற்கு இவர் இசையமைத்த தீம் மியூசிக் தற்போது வரை பல ரசிகர்களின் செல்போனிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் பிரமாண்ட செட் ஒன்று அமைத்து. அதில் தனது அனுபவத்தை பற்றி வெளிப்படையாக கூறி வந்தார்.

அப்போது விஜய்யின் மகன் எனது இசைக்கு ரசிகன் எனவும் அதனை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் கூறினார். அதாவது விஜய்யின் மேனேஜர் ஒருமுறை யுவன்சங்கர் ராஜாவிற்கு புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் விஜய்யின் மகனான சஞ்சய் யுவன் எனப் பெயரிடப்பட்ட டீசர்ட் அணிந்திருந்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த யுவன் சங்கர் ராஜாவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பென்டாஸ்டிக் ப்ரோ என மட்டும் மெசேஜ் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தை நான் எதிலும் பதிவிடவில்லை என கூறினார். அதற்கு காரணம் அவர் தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பியதாகவும் இதனை தனக்கு தெரிந்தால் போதும் என நினைத்ததாகவும் கூறினார். இதனை சமீபத்திய மேடையில் தெரிவித்தார்.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜா இதுவரைக்கும் தான் இசையமைத்ததில் அஜித்திற்கு தான் சிறந்ததாக இசை அமைத்துள்ளதாக பல மேடைகளில் கூறியுள்ளார். விஜய்க்கு இவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் இசையமைத்து இருந்தார். ஆனால் விஜய் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் எதார்த்தமாக யுவனிடம் பழகுவதாகவும் அவ்வளவு பெரிய நடிகர் கொஞ்சம்கூட தலைக்கனம் இல்லாமல் தன்னிடம் பேசுவதாகவும் தெரிவித்தார்.

Trending News