Yuvan Shankar Raja: விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொருவராக வெள்ளித்திரை பக்கம் படையெடுக்கின்றனர். அதில் சிவகார்த்திகேயன், சந்தானம், கவின் ஆகியோர் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டனர்.
அந்த வரிசையில் ரியோவும் இப்போது முன்னேற தொடங்கியுள்ளார். இவர் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் கடந்த வருடம் வெளிவந்த ஜோ மிகப்பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.
காதல் பின்னணியில் உருவான அப்படத்தில் ரியோவின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது. அதை தொடர்ந்து அவருடைய அடுத்த படம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதன்படி ரியோ அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஸ்வினித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சுழல் வெப் தொடர் நாயகி கோபிகா ரமேஷ் ஹீரோயின் ஆக நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரியோ
மேலும் 40 நாட்களுக்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் கல்யாணை வைத்து பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்திருந்தார்.
அது வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து மாமனிதன், பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்களையும் தயாரித்தார். அதை அடுத்து தற்போது அவர் விஜய் டிவியின் நாயகனை வைத்து அடுத்த ப்ராஜெக்டை தொடங்கியுள்ளார்.
இப்படமும் ஜோ போல் ரியோவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் இப்போதே வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும் ரியோவை அடுத்த கவின் என ரசிகர்கள் கூறிவரும் நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் இணைவது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கவினுக்கு போட்டியாக வளரும் ரியோ
- பவதாரணியின் குரல், மொத்தமாக நொறுங்கி போன யுவன்
- இப்படியே போனா சன் டிவி டம்மி ஆகிடும் போல
- 3 முறை விஜய் டிவி நடிகைக்கு வந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்