Yuvan Shankar Raja : யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். என்ன தான் இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று பலர் கூறினாலும் இவருக்கென்று தனித்திறமையால் தன்னுடைய வித்தியாசமான இசையின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை யுவன் சங்கர் ராஜா கொண்டாடுகிறார். இந்த ஆண்டு அவருக்கு மிகவும் மறக்க முடியாத ஆண்டாக தான் அமைய இருக்கிறது. பெரும்பாலும் வெங்கட் பிரபுவின் படங்களில் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைப்பார்.
அந்த வகையில் அஜித்துக்கு மங்காத்தா படத்தில் மாஸ் பாடல்களை கொடுத்திருந்தார். அதேபோல் இந்த வருடம் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் படத்திற்குப் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
யுவனின் சொத்து மதிப்பு
இந்த சூழலில் 16 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பை பார்க்கலாம். ஒரு படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த யுவன் சங்கர் ராஜா கோட் படத்திற்கு 10 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் பல வகையான கார் வகைகளையும் யுவன் சங்கர் ராஜா வைத்துள்ளார். பென்ஸ் GLE கிளாஸ், மினி கூப்பர், ஹாஸ்டல் மார்ட்டின் வேன்குவிஸ் போன்ற சொகுசு கார்கள் யுவனிடம் இருக்கிறது.
யுவனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 120 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
பின்னணி இசையில் பட்டையை கிளப்பும் யுவன்
- கோட் படத்தின் மெயின் வில்லனே யுவன்சங்கர் ராஜா தான்
- விஜய்க்கு சம்பவத்தை செஞ்சு விட்ட யுவன்
- யுவன் செய்த காரியத்தால் கடுப்பான வெங்கட் பிரபு