புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோனியை பற்றிய உண்மையை போட்டுடைத்த யுவராஜ் சிங்.. முக்கிய வீரர்கள் பட்ட அவமானம்

2019ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கு பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளுக்காக மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த இவர் இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை அளித்து ஊக்குவித்தார். ஆனால் தொடர் தோல்விகளால் இப்போது அந்த கேப்டன் பதவியை திரும்பவும் பெற்றுக்கொண்டார்.

சமயத்தில் யுவராஜ் சிங், தோனி பற்றிய ஒரு உண்மையை தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அதாவது தோனி ஓய்வு பெறுவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் சரியாக விளையாடவில்லை.அவரின் ஃபார்ம் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. தொடர்ந்து அனைவரிடமும் படு மோசமான விமர்சனங்களை பெற்று வந்தார்.

ஆனால் அப்போதும்கூட ரவி சாஸ்திரி, கேப்டன் விராத் கோலி போன்றவர்கள் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் ஆதரவு அளித்து வந்தனர். அவரைத் தாங்கும் தூணாக இருந்தனர். அவருக்குத் தொடர்ந்து பல வாய்ப்புகளை வாரி வழங்கினார்கள்.

இதுபோன்ற ஒரு ஆதரவை அனைவருக்குமே பிசிசிஐ கொடுத்திருந்தால் இன்று வரை நிறைய சாதனைகள் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் என யுவராஜ் மறைமுகமாக தோனியை தாக்கிப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி விவிஎஸ் லக்ஷ்மன், ஹர்பஜன் சிங், கௌதம் காம்பீர் போன்ற வீரர்கள் மிகுந்த மன வேதனையோடும், அவமானத்தோடும் இந்திய அணியிலிருந்து விடைபெற்றனர் என யுவராஜ் சிங் அவர் மனதில் இருந்த ஆதங்கத்தை போட்டுடைத்துள்ளார்.

Trending News