புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜீ தமிழ் 2 நடிகைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பொறாமையில் பொங்கும் சக நடிகைகள்

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் தினம்தோறும் அவர்களை பார்ப்பதினால் குடும்பத்தில் ஒருவர் போல எண்ணுகிறார்கள். அதுமட்டுமின்றி சீரியல் நடிகைகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர்.

இதனால் ரசிகர்களிடம் நேரடியாக உரையாட முடிகிறது. அந்தவகையில் ஜீ தமிழ் தொடரில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகைகள் ஷபானா மற்றும் ரேஷ்மா. அதாவது ஜீ தமிழில் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் செம்பருத்தி. இதில் பார்வதியாக நடித்தவர் ஷபானா.

Also Read :செம்பருத்தியை அடுத்து, டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடப்படும் பிரபல சீரியல்!

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதன் பின்பு பூவே பூச்சூடவா என்ற தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. ஷபானா, ரேஷ்மா, சைத்ரா ரெட்டி ஆகியோர் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர்.

ஷபானா மற்றும் ரேஷ்மாவுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட் அடித்து வருகிறது. முதலில் ஷபானாவுக்கு அவருடைய காதலன் ஆரியன் உடன் திருமணம் நடந்தது. அடுத்த நாளே ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் திருமணம் நடந்தேறியது. நெருங்கிய தோழிகள் இருவருக்கும் அடுத்தடுத்த நாளில் திருமணம் நடைபெற்றது பெரிய அளவில் பேசப்பட்டது.

Also Read :விவாகரத்து பற்றி முதல் முறையாக வாயை திறந்த ஷபானா.. கண்ணியம் தவறிய நடத்தை என வேதனை

இந்நிலையில் தற்போது ஒரே படத்தில் ஷபானா, ரேஷ்மா இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர்கள் இருவரும் பகையை காத்திரு என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் குறித்து வேறு எந்த செய்தியும் இன்னும் வெளியாகவில்லை.

இதன்மூலம் சின்னத்திரையிலிருந்து இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளனர். திருமண வாழ்க்கை தான் ஒரே நேரத்தில் ஆரம்பித்தார்கள் என்றால் சினிமா வாய்ப்பும் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் கிடைத்துள்ளது என பலரும் பிரமிப்பாக பார்க்கின்றனர்.

Also Read :எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது.. மிகப்பெரிய சவாலை சந்திக்க போகும் பாக்கியா

Trending News