வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

முக்கியமான சீரியலில் இருந்து விலகும் ஜி தமிழ் கதாநாயகன்.. என்டரி கொடுக்கப் போகும் சன் டிவி ஹீரோ

Zee Tamil Serial: சன் டிவி சீரியலில் நடித்துவிட்டால் மக்களிடம் பிரபலமாகி விடுவது ரொம்பவே சுலபமானது. ஏனென்றால் மக்கள் மத்த சேனல்களை விட சன் டிவி மூலம் வரும் சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். அதனால் சன்டிவி சீரியலில் நடித்து விட்டால் மற்ற சேனலில் ஈசியாக வாய்ப்பை பெற்று விடலாம். அப்படித்தான் சன் டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஒருவர் பல வருடங்களுக்குப் பின் விஜய் டிவியில் ஹீரோவாக என்டரி கொடுத்தார்.

அப்பொழுதும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அந்த நடிகர் வேறு யாருமில்லை சன் டிவி மூலம் தென்றல் சீரியலில் தமிழ் கேரக்டரில் அறிமுகமான தீபக். துளசிக்கு ஜோடியாக நடித்த பின்பு இந்த நாடகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பின் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் மறுபடியும் தமிழ் கேரக்டரில் உள்ளே நுழைந்தார்.

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை பார்க்கும் ஜீ தமிழ்

இந்த நாடகமும் மக்களின் ஃபேவரைட் சீரியலாக இடம் பிடித்தது. இந்த சூழலில் இனிதாக அந்த நாடகம் முடிந்த நிலையில், தற்போது தீபக் மறுபடியும் ஜீ தமிழில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். ஜீ தமிழில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு சில சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

அந்த வகையில் கார்த்திகை தீபம், சந்தியா ராகம், நினைத்தாலே இனிக்கும், அண்ணா, இதயம் போன்ற பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் அண்ணா சீரியலை ஒரு நாள் கூட மிஸ் பண்ண முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஒரு அண்ணன் நான்கு தங்கைகளின் கதையையும் அவர்களுக்குள் நடக்கும் பாசத்தையும் வைத்து எதார்த்தமான கதையாக வருகிறது.

இதில் சண்முகம் என்னும் கேரக்டரில் முக்கிய கதாநாயகராக நடித்து வரும் மிர்ச்சி சிவாவின் நடிப்பு தத்துரூபமாக இருப்பதால் மக்களை அதிகமாக கவர்ந்து விட்டது. ஆனால் சில காரணங்களால் மிர்ச்சி சிவா இந்த சீரியலை விட்டு விலகப் போகிறார். அதற்கு பதிலாக தீபக் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரத்தில் இருந்து இனி அண்ணா என்கிற சண்முகம் கேரக்டரில் மிர்ச்சி சிவாவை பார்க்க முடியாது.

இதற்கு பதிலாக தீபக் வரப்போகிறார். ஆனால் இந்த கேரக்டருக்கு தீபக் செட்டாகுவாரா என்ற கேள்வி தான் தற்போது மக்களிடம் எழுந்திருக்கிறது. ஏனென்றால் தீபக் இதுவரை நடித்த கேரக்டர் காதல் மற்றும் கணவர் போன்ற கேரக்டரில் தான் ரொமான்ஸ் பண்ணி இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு நான்கு தங்கைகளுக்கு அண்ணன் ஆகவும், சவுந்தர பாண்டியனை எதிர்க்கும் வில்லனாகவும் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இனி மிர்ச்சி சிவா இல்லையென்றால் நாங்கள் இந்த நாடகத்தை பார்ப்பதை தவிர்த்து விடுவோம் என்றும் மக்கள் கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. ஜீ தமிழில் அதிகமாக போகக் கூடிய முக்கியமான சீரியலில் இப்படி குளறுபடிகள் ஏற்படுவதால் சேனலுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் வகையில் அடிபட வாய்ப்பிருக்கிறது .

ஜீ தமிழில் கலக்கி வரும் சீரியல்கள்

- Advertisement -spot_img

Trending News