Sun Tv Serial: சன் டிவியில் ஏற்கனவே எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்து மக்களின் பேவரட் சேனலாக இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இன்னும் புதுப்புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது ஆடுகளமே என்ற சீரியல் ப்ரோமோ ஏற்கனவே வெளிவந்துவிட்டது. ஆனாலும் நேரம் எதுவும் சரியாக கிடைக்காததால் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது செல்லமே சீரியலின் சூட்டிங் ஆரம்பம் ஆகிவிட்டது.
இதில் சுந்தரி சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்த ஜிஷ்ணு மேனன் கமிட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் சேனலில் இரண்டு சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா நடிக்கப் போகிறார். இவர் ஏற்கனவே பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற சீரியல்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்கிறார்.
ஆனால் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் கிழக்கு வாசல் சீரியல்கள் சில காரணங்களாக பாதிலேயே முடிவடைந்து இருக்கிறது. அதிலும் கடைசியாக நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் ஜெய் ஆகாஷ் உடன் இணைந்து நடித்து மக்களின் பேவரிட் சீரியலாக வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் ஜெய் ஆகாஷ் திடீரென்று சீரியலில் இருந்து விலகப் போவதாக முடிவு எடுத்த நிலையில் நாடகத்தை அப்படியே முடித்து விட்டார்கள்.
இதனால் விரக்தியான ரேஷ்மாவுக்கு தற்போது தான் சன் டிவி மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரேஷ்மா சன் டிவியில் நடிக்க போகும் முதல் சீரியல். அந்த வகையில் செல்லமே என்ற சீரியலில் ஜிஷ்ணு மேனனுக்கு ஜோடியாக ரேஷ்மா வெற்றியை கொடுக்க தயாராகி விட்டார்.