எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வருகிற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 50 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டி குரூப் ஏ, பி என பிரிக்கப்பட்டுள்ளது. சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற நான்கு அணிகள் ஏ பிரிவில் இருக்கிறது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, பங்களாதேஷ் போன்ற அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் சுற்று தவிர மற்ற போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் விளையாடப்படுகிறது. அதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட மறு வாய்ப்பு கிடையாது.
மொத்தமாய் 15 போட்டிகள் கொண்ட இந்த தொடர் மார்ச் ஒன்பதாம் தேதியோடு முடிவடைகிறது. குரூப் ஏ, குரூப் பி என தனித்தனியே இரண்டு அரை இறுதி போட்டிகள் நடைபெறும். முதல் நான்கு இடத்தை பிடித்த அணிகள் இதில் பங்கு வரும். இது மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது.
இந்த தொடரில் இந்தியாவிற்கு போட்டியாக கருதப்படும் ஒரே அணி ஆஸ்திரேலியா தான். இப்பொழுது அவர்களுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் இது இந்தியாவிற்கு சாதகமாய் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொருத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் 50 ஓவர் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் மூன்று நட்சத்திர வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஸ், கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில் வுட் இவர்கள் மூவரும் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி வலுவிழந்து காணப்படுகிறது. அந்த அணியின் புதிய கேப்டனாக ஹெட் அல்லது ஸ்மித் அணியை வழிநடத்துவார்கள் என தெரிகிறது.