செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சினிமா டூ அரசியல்.. கலக்கிய, கலங்கிய 12 பிரபலங்கள்

MGR – Vijay : சினிமா பிரபலங்கள் பலருக்கும் அரசியல் கட்சி தொடங்குவதில் நாட்டம் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்த பெருமை எம்ஜிஆரை சேரும்.

அதன் பிறகு ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போதும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை வழிநடத்தி வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கினார். சினிமாவில் பெற்ற பெயர் அரசியலில் சிவாஜியால் பெற முடியவில்லை.

1989 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்யராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

Also Read : விஜயகாந்த் பற்றி எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உழவன் மகனுக்கு கிடைத்த பாராட்டு

இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அரசியல் மீது உள்ள ஆர்வத்தால் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார். மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும் அளவிற்கு விஜயகாந்துக்கு வாக்குகள் கிடைத்தது. அதன் பின்பு மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்த போதும் பெரிய அளவில் தேமுதிகவால் வாக்குகள் பெற முடியவில்லை.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தற்போது வரை இந்த கட்சியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இயக்குனர் மற்றும் நடிகருமான சீமான் 2010 ஆம் ஆண்டு தன்னுடைய இயக்கத்தை நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். அதுவும் தமிழகத்தில் இரண்டு ஆளுமை கட்சிக்கு அடுத்தபடியாக தனது கட்சியை மேம்படுத்தி உள்ளார். அடுத்ததாக 2015ஆம் ஆண்டு கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை தொடங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் கமல் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த முறை திமுகவுடன் கூட்டணி போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நவரச நாயகன் கார்த்திக் 2018 ஆம் ஆண்டு மனித உரிமை காக்கும் கட்சி என்ற தொடங்கினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இந்த கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது தொண்டர்களுக்கே தெரியாத நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி இரண்டாம் தேதி 2024 ஆம் ஆண்டு தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட இருக்கிறது.

Also Read : ஸ்டாலின் Vs விஜய், உதய் Vs விஜய்.. குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுமா தளபதியின் தமிழக வெற்றி கழகம்.?

Trending News