புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தனுஷ் கைவசம் இருக்கும் 11 படங்கள்.. இசைஞானியாக அவதாரம் எடுக்கும் அசுரன்

Actor Dhanush: பொதுவாக பெரிய ஹீரோக்களை எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருவார்கள். அதன்பிறகு ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்த படத்தில் நடிக்க தொடங்குவார்கள். ஆனால் நடிப்பு அசுரனாக இருக்கும் தனுஷின் கைவசம் இப்போது 11 படங்கள் இருக்கிறது.

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இதற்கான பணி தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக மலையாள இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தனுஷ் ரஞ்சனா படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு எல் ராய் உடன் மீண்டும் இணைந்த படம் தேரே இஷ்க் மெய்ன். இந்த படத்தின் டீசர் ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் இனி எந்திரிக்கவே கூடாது.. தனுஷ் போட்ட புதுக்கணக்கு

மேலும் தனுஷின் அஸ்தான இயக்குனரான வெற்றிமாறனுடன் ஒரு படம் பண்ணுகிறார். அந்த படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் அல்லது புதிய படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக அஜித்தின் இயக்குனர் எச் வினோத்துடன் தனுஷ் முதல்முறையாக கூட்டணி போட இருக்கிறார்.

வினோத் கமல் படத்தை இயக்கிய பிறகு தனுசுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான சம்பவம் செய்த நெல்சன் உடனும் தனுஷ் ஒரு படம் பண்ணுகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கடைசியாக தனுஷ் தானே ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் வேறு ஒரு நடிகரை ஹீரோவாக வைத்து எடுக்க இருக்கிறார்.

ஆனால் அந்தப் படத்திலும் தனுஷ் கேமியோ தோற்றத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறிப்பாக இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்கிறார். ஆகையால் இசைஞானியாக தனுஷ் சம்பவம் செய்ய இருக்கிறார். இவ்வாறு தனுஷ் நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு கோலிவுட்டில் ஒரு பிசியான நடிகராக வலம் வர இருக்கிறார்.

Also Read : ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை அவிழ்த்துவிட்ட தனுஷ்

Trending News