‘ராமாயணா பாகம் 1’ திரைப்படம் உலகளவில் மொத்தம் 1519 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் வெறும் இரண்டு வாரங்களில் 1500 கோடி வசூலைக் கடந்த படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், உலகளவில் 1500 கோடி வசூலைக் கடந்ததன் மூலம் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் இப்படம் பாதுகாப்பான வசூல் நிலையை எட்டியுள்ளது.
டப்பிங் படமாக வெளியானது மற்றும் உள்ளூர் படங்களின் போட்டி ஆகிய காரணங்களால், சாய் பல்லவி, யஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் எதிர்பார்த்த அளவுக்குப் பிரம்மாண்டமான வசூலைப் பெற முடியவில்லை.
இருப்பினும், வட இந்தியா மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இப்படத்திற்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, IMAX மற்றும் 3D தியேட்டர்களில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தைப் பார்க்க வருவது வசூலுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் ‘ராமாயணா’, அடுத்ததாக புஷ்பா -2 1742 கோடி, பாகுபலி- 2 1788 கோடி ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, 2000 கோடி இலக்கை நோக்கித் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், பிரேசில், இத்தாலி, போலந்து மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால், இப்படத்தின் வெளிநாட்டு வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




