Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பாக்ஸ் ஆபீஸில் விட்ட இடத்தைப் பிடிப்பாரா கார்த்தி? காத்திருக்கும் இரண்டு முக்கியப் படங்கள்!

பாக்ஸ் ஆபீஸில் விட்ட இடத்தைப் பிடிப்பாரா கார்த்தி? காத்திருக்கும் இரண்டு முக்கியப் படங்கள்!

இந்த ஆண்டு வெளியான ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், நடிகர் கார்த்தி தனது அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
‘டாணாக்காரன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் ‘மார்ஷல்’. 1960 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில், ராமேஸ்வரத்தின் பின்னணியில் நடைபெறும் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகி வருகிறது.

அதிகாரத்திற்கும் கிளர்ச்சிக்கும் இடையிலான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரபு, ஆதி பினிசெட்டி (வில்லன்), லால், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். தீபாவளி 2026-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 முதல் 50 நாட்கள் வரை எஞ்சியுள்ளதால், ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இதனால், 2027-ஆம் ஆண்டு இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


தெலுங்கில் ‘மேட்’ (MAD) திரைப்படத்தின் மூலம் வெற்றி பெற்ற இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கார்த்தி 30 என்னும்
பெயரிடப்படாத படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் மூலம் கார்த்தி நேரடியாகத் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.


முழுக்க முழுக்க கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இதற்காக சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான குடியிருப்புப் படப்பிடிப்புத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.


கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் காரணமாகப் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து, இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் கார்த்தி களமிறங்கவுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் அவருக்குப் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படங்களாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.