பொன்னியின் செல்வன் இதுவரை எழுதப்பட்ட நாவல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்கி வருகிறது. இதுதான் மிகப் பெரிய நாவலாக இன்றுவரை சாதனை படைத்து வருகிறது. இந்த நாவலை இப்பொழுது படமாக மணிரத்தினம் எடுத்து வைத்திருக்கிறார். சமிபத்தில் இந்த படத்தின் டீசர் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மணிரத்தினத்திற்கு முன்னரே இந்த நாவலை இரண்டு பெரும் நட்சத்திரங்கள் எடுக்க ஆசைப்பட்டு தோல்வி அடைந்து விட்டனர். அதில் ஒருவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மற்றொருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இந்த நாவலை படமாக எடுக்க திட்டம் போட்டனர், ஆனால் அது கைகூடி வரவில்லை.
இந்த நாவலை படமாக எடுப்பதற்கு முதலில் ஆசைப்பட்ட எம் ஜி ராமச்சந்திரன் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் அரசியலில் குதித்ததால் அவரால் அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. இருந்தாலும் அந்த ஆசையை கைவிடாத எம்ஜிஆர் சில கதாபாத்திரங்களை தேடி அலைந்து, நடைமுறையில் இது சாத்தியப்படாது என்று ஒதுக்கிவிட்டார்.
அதன்பின் உலகநாயகன் கமலஹாசன் இதனை கையிலெடுத்தார். இந்த நாவலை படமாக எடுப்பதற்கு ஒரு பெரும் பொருட்செலவு ஆகும் என்ற ஒரே காரணத்தினால் கமலும் அதை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவரின் சொந்தக்காரரான மணிரத்தினம் எடுத்தது அவருக்கு ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது.
மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் நாவலை 2000ஆம் ஆண்டே எடுக்க ஆசை பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் இப்பொழுது தான் அந்த கனவு கனவு பலித்துள்ளது . கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த கனவோடு அவர் இருந்திருக்கிறார்.
இப்பொழுது எல்லா கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து மெருகேற்றி இருக்கிறார் மணிரத்தினம் . தமிழ்நாட்டின் பாகுபலி படம் போல் இது அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பொண்ணியின் செல்வன் எப்பொழுது தியேட்டரில் வெளியாகும் என்று உச்சகட்ட ஆர்வத்தில் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.